நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதைவிட, ஃபேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதே அதிகம் நடந்தேறுகிறது. கேட்டால் அவர்களும் நண்பர்கள் தானே என்பார்கள். தவறில்லைதான் ஆனாலும் அதனால் பல சிக்கல்கள் வரும் என்பதை நினைவில்கொள்க!
முகம்தெரியாத பலரை நாம் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக்குவதில் உள்ள நன்மைகளைவிட தீமைகளே ஏராளம். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பல நயவஞ்சகர்களும் ஃபேஸ்புக்கில் அலைகிறார்கள் என்பதை நினைவில் வைத்தே உங்களைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சரி! எவற்றையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது என்பதை இங்கே விவரித்துள்ளோம்.உங்களுக்கே தெரிந்திருக்கலாம். தெரியாதவற்றை தெரிந்துகொள்க!
சுய விவரங்கள்:
உங்களை பற்றிய முழுமையான சுய விவரங்களை பகிரவே தேவையில்லை. சிலர் வீட்டு முகவரி முதல், செல்போனின் எண்கள் வரையிலும் ஃபேஸ்புக்கில் போட்டிருப்பார்கள். சிலர் அவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எதை ஷேர் செய்யவேண்டும் என்பதில் கவனம்செலுத்துங்கள்.
இருப்பிடம்:
ஃபேஸ்புக்கில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது தற்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை 'சுவற்றில்' எழுதும்பொழுது குறிப்பிடமுடியும். அதுவே சில நேரங்களில் சிரமங்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்க!
புகைப்படங்கள்:
ஃபேஸ்புக் பக்கங்களில் உங்களுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதில் கவனம்தேவை. அதிலும் பெண்கள் என்றால் அதிக கவனம்தேவை. உங்களால் வெளியிடப்படும் புகைப்படங்கள் சில தீயவர்களால் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத சிரமத்தை தவிர்க்க, தெரிந்த நண்பர்கள், ஃபேஸ்புக் பிரைவசி ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
குடும்ப படங்கள்:
உங்களுடைய குடும்ப படங்கள், ஃபேஸ்புக் போன்ற திறந்தவெளி குப்பைமேட்டில் பகிர்வதில் மிகுந்த கவனம்தேவை. மனைவி, குழந்தைகள் படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அப்படியே பயன்படுத்தினாலும் தெரிந்தவர்களுடன் மட்டும் பகிருங்கள்
.
நிறுவனங்கள்:
ஃபேஸ்புக்கில் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் பற்றி தவறாக எழுதாதீர்கள். ஒருவேளை அது மற்றவர்களுக்கு உங்கள்மேல் கீழ்த்தரமான என்னத்தை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே அம்மாதிரி நிகழ்வுகளை கவனமாக கையாளுங்கள்.
அரசியல்:..
அரசியல் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ தவறாக ஃபேஸ்புக்கில் எழுதவேண்டாம். உங்கள்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
தொகுப்பு:அதிரை ஈஸ்ட் ப்ரண்ட்ஸ்.
2 comments:
ӏf some one needѕ еxpert view regarding blogging
then i propοsе him/her to go to see thiѕ blog, Kееp uρ thе nice job.
Hеre is my blog: los angeles travel guide
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.
நன்றி.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!