தமிழகத்தில், திருவாரூர்-காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதையை, அகல ரயில்
பாதையாக மாற்றும் பணி, விரைவில் துவங்கும்' என, ரயில்வே அமைச்சர்
முகுல்ராய் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, எம்.பி.யான டி.ராஜா நேற்று,
ராஜ்யசபாவில் கேள்வி நேரத்திற்குபின் பேசுகையில், ""திருவாரூர்-காரைக்குடி
ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்படாமல் உள்ளது. இந்த ரயில் பாதை, பல
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாகவும், சுதந்திரப் போராட்ட
இயக்கத்துடன் தொடர்புடைய பகுதிகள் வழியாகவும் செல்கிறது.
இந்த அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி, நாகப்பட்டினம்
மாவட்ட மக்கள் நாளை (இன்று) போராட்டம் நடத்த உள்ளனர். எனவே, இந்த ரயில்
பாதை திட்டத்தை விரைவில், ரயில்வே துறை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த, மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய், "தமிழகத்தில், திருவாரூர்-காரைக்குடி இடையேயான மீட்டர் கேஜ் பாதையை அகற்றி, அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்.
இந்த விவகாரத்தை அவசரகதியில் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில்வே வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
நன்றி: தினமலர்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!