மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில ஐடியாக்கள்!

கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும், வீணாக்காமல் எவ்வாறு மிச்சப்படுத்தலாம் என்று மின்சாரத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுவிட்ச் ஆப்

ஒரு வீட்டின் அனைத்து அறைகளிலும் மின்சார விளக்கை எறிய விடாதீர்கள். எந்த அறைக்கு செல்கிறீர்களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம். அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும்.

ஒரு அறை‌யி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு அறை‌க்கு செ‌‌ல்லு‌ம் போது, அ‌ந்த அறை‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் பே‌ன், லை‌ட், டி‌வி ஆகியவற்றின் சு‌வி‌ட்களை அணை‌த்து‌வி‌ட்டு செ‌ல்லு‌ங்க‌ள்.

மி‌க்‌சி, ‌பி‌ரி‌ட்‌ஜ், அய‌‌ர்‌ன் பா‌க்‌ஸ்,‌கிரை‌ண்ட‌ர், வா‌‌ஷ‌ி‌ங் மெஷ‌ி‌ன் போ‌ன்ற ‌வீ‌ட்டு உபயோக‌‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் தேவை இ‌ல்லாதபோது அவ‌ற்‌றி‌ன் ‌பிள‌க்கை ‌பிடு‌ங்‌கி வை‌த்து ‌விடு‌ங்க‌ள் அ‌ல்லது சு‌வி‌ட்‌‌ச் ஆ‌ப் செ‌‌ய்யு‌ங்க‌ள்.

மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்புகளை ஏறக்கட்டுங்கள். மின்சார சிக்கனம் தரும் மின் விளக்குகளை பொருத்துங்கள். பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடியவாறு அறைகளை வடிவமையுங்கள்.

பிரிட்ஜ் கவனம்

கோடை காலத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது ப்ரிட்ஜ்தான். எனவே ஒ‌வ்வொரு முறை ‌பி‌ரி‌ட்ஜை ‌திற‌க்கு‌ம் போது‌ம் அதிக அளவில் ‌மி‌ன்சார‌ம் ‌வீணா‌கிறது என்பதை கவனத்தில் கொ‌ள்ளு‌ங்க‌ள். எனவே பி‌ரி‌ட்ஜை அடி‌க்கடி ‌‌திற‌ந்து மூட வே‌ண்ட‌ம்.

ஏசியில் மின் சிக்கனம்

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.

பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும்.

இந்த அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும் சேமிக்கப்படும்.

1 comments:

habeb hb said...

சகோதர் அஸ்ரப். பதிந்த கட்டுரை அருமை. ஆனால் மின்சாரம் ஒரு நாளைக்கு ஓன்று அல்லது மூன்று மணி நேரம் கிடைக்கிற மின்சாரத்தை எங்கிருது சேவ் பண்ணுவது. இவங்க வீடுற மின்சாரத்தில் வச்ச பேட்டரி கூட சார்ஜ் ஏற மாட்டுகிறது.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!