கோடையில் உணவு ஜீரணமாவது சற்றே சிரமமானது. கோடையில் காரமாகவும்,
அதேசமயம் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது
அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கோடைகாலத்தில் காரம், புளிப்பு, உப்பு
போன்ற சுவைகளை தவிர்க்கவேண்டும். அதேசமயம் இனிப்பு, கசப்பு மற்றும்
துவர்ப்புச் சுவை உடைய உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும். இந்த சுவைகளால்
பித்தம் சாந்தமடைகிறது. எனவே கோடையில் உண்ணவேண்டிய எளிதான ஆரோக்கிய உணவுகளை
பட்டியலிட்டுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.
மிதமான உணவு
கோடையில் மிதமாக உண்ணுங்கள் இதனால் ஜீரண உறுப்புகள் எளிதாக உணவுகளை
ஜீரணித்து சத்துக்களாக மாற்றும். நெல்லிக்காயை அடிக்கடி உணவில்
சேர்த்துக்கொள்ளவும். இதனால் பசி தூண்டும். அதேபோல் கீரை வகைகளை
சாப்பிடலாம்.
இனிப்பான பழங்கள்
பழவகைளில் இனிப்பானவை நல்லது. மலைப்பழம், பூவன்பழம், நேந்திரம்
வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை
ஆகியவற்றின் பழரசங்களை பசிநிலைக்குத் தகுந்தவாறு குடித்து உடல் சூட்டை
தணித்துக் கொள்ளவேண்டும்.
துவர்ப்பு சுவை காய்கள்
துவர்ப்புச் சுவைகொண்ட வாழைப்பூவை வடைகறி செய்து சாப்பிட்டால் பித்த
சாந்தியும், ரத்த சுத்தியும் ஏற்படும் வாரத்திற்கு இருமுறையாவது கோடையில்
வாழைப்பூவை உணவில் சேர்க்க வேண்டும். அதுபோல நீர் காய்களாகிய
வெள்ளரிக்காய், புடலங்காய் பூசணிக்காய் போன்றவற்றை கூட்டு போல் (தேங்காய்,
மிளகு, ஜீரகம் பொடித்து சேர்த்த) செய்து சாப்பிடவேண்டும். தண்ணீரைக்கூட
மண்பானையில் ஊற்றி குடிக்கலாம் உடல் சூடு குறையும்.
வெள்ளரிக்காய்
தினசரி உணவில் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி போன்றவைகளையும்
சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சி,
கொத்தமல்லி, உள்ளிட்டவைகளை உணவு ஜீரணத்திற்காக சேர்த்துக்கொள்ளலாம். இதனால்
கோடையில் சூட்டினால் ஏற்படும் வயிறு கோளாறுகள் தவிர்க்கப்படும்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!