இப்படியிருக்க, நமதூர் மண்ணின் மைந்தர்கள்
மருத்துவர்களாக சேவைக்கு வருவதும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது
அவ்வகையில், சத்தமே இல்லாமல் கடந்த இரண்டரை வருடங்களாக பட்டுக்கோட்டை சின்னையா
தெருவில் "ஆயிஷா பல் மருத்துவமனை" என்று இயங்கி வருவது
அதிரைவாசிகள் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.
அதிரையைச் சார்ந்த பல்மருத்துவர் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான்
B.D.S.M.C.I.P., தனது சேவைக்கே உரிய புன்னகையும், இனிமையான பேச்சும்,
அதிரையர்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவரின் முகத்திலும்
புன்னகையை சூட்டுவதில் திறமையானவர்.
பல்மருத்துவர் பஜ்லுர் ரஹ்மான் அவர்களைப் பற்றி
சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பெருமையாக சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது,
நேர்மையான மருத்துவம், கச்சிதமான சிகிச்சை, தெளிவான ஆலோசனைகள் என்று அடுக்கிக்
கொண்டே செல்லலாம்.
இத்தகைய நற்குணங்கள் கொண்ட மருத்துவர் நமதூரிலும்
"ஆயிஷா பல் மருத்துவமனை"யை கடந்த 13-மே-2012
அன்று 28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடு, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில் என்ற முகவரியில்
துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல சுகாதரமான
மருத்துவம், கனிவான பேச்சு, பல்லுக்கு உறுதி(யளிப்பது) ஆக அவரிடம் மருத்துவம்
பார்க்க செல்பவர்களின் சொல்லுக்கும் நிலையான உறுதி !
அனைத்து வகையான பல்மருத்துவ சிகிச்சைகளை,
உயர்தரமாக வழங்கி வரும் 'ஆயிஷா பல் மருத்துவமனை' தற்போது அதிரையிலும் இருப்பதனால்,
அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் சிகிச்சைக்கு என்று அதிக செலவுகள்
செய்து வெளியூர் செல்ல வேண்டியதில்லை. ஊரில் அமையப் பெற்றிருக்கும் மருத்துவமனையை
பொதுமக்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
*பல் சுத்தம் செய்தல்
*பல் கறை நீக்குதல்
*பல் சொத்தை அடைத்தல்
*பல் கட்டுதல் (பல்செட், செராமிக் பல்)
*பல்வேர் சிகிச்சை (root canal treatment)
*பல் அறுவை சிகிச்சை
*பல் கிளிப் போடுதல்
*ஈறு நோய் சிகிச்சை
என்று 'பல்'வேறான சிகிச்சை வசதிகள் சகலமும் இங்கே
கிடைக்கிறது. மருத்துவரின் அலைபேசி எண்: +91
96007 14614 begin_of_the_skype_highlighting +91 96007
14614 end_of_the_skype_highlighting
'பல்'வேறு வேலைகளுக்கிடையே 'பல்' வேர்கள் பற்றி
சிந்தித்துக் கொண்டிருக்கும்போது நமதூரில் இல்லையே என்று ஏங்கிய தருணமும் எனக்கு
உண்டு.
ஆயிஷா பல் மருத்துமனையின் சேவை அதிரை
பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள மருத்துவ சேவையாக இருக்கும் என்று நம்பிக்கை வைப்போம்
இன்ஷா அல்லாஹ்
நன்றி அபுஇபுறாஹிம்


3 comments:
இது போன்று பல் மருத்துவம் நமது ஊர்க்கு மிக அவசியமான ஒன்று இந்த பணி சிறப்பாக தொடர அல்லாஹு துணை செய்வானாக. ஆமின்
இது போன்று பல் மருத்துவம் நமது ஊர்க்கு மிக அவசியமான ஒன்று இந்த பணி சிறப்பாக தொடர அல்லாஹு துணை செய்வானாக. ஆமின்
இது போன்று பல் மருத்துவம் நமது ஊர்க்கு மிக அவசியமான ஒன்று இந்த பணி சிறப்பாக தொடர அல்லாஹு துணை செய்வானாக. ஆமின்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!