எடை குறைக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் காலையில் உணவை சாப்பிட
மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில்
இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு
உண்போம். ஏனெனில் அப்போது உண்டால் தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற
சக்தியானது கிடைக்கும். இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும்.
மதியம் கூட உண்ணாமல் இருந்து விடலாம், ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால்
எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இதை
படித்தப்பிறகாவது உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
காலையில் உண்ணாமல் இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?
1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது
உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு
வேலை செய்ய உடலுக்கு சக்கியானது தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவே
சிறந்தது.
2. சிலர் எடையை குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து, மற்ற நேரத்தில்
கொஞ்சம் உண்பர். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து மதியம் குறைவாக
உண்ண முடியாது, அப்போது வயிறு நிறைய தான் உண்பர். ஆனால் அது அவர்களுக்குத்
தெரியாது. மேலும் அத்தகைய உணவை உண்ணும் போது ஆரோக்கியமான உணவைக் கூட
உண்ணமாட்டார்கள். ஆகவே இதனால் எடை தான் கூடுமே தவிர எடை குறையாது.
3. மேலும் உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின்
அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில்
மெட்டபாலிக் டிஸ்ஆடரை ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.
4. வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் காலை உணவை
உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆகவே காலை
உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை
அதிகப்படுத்துகிறது.
5. காலை உணவை உண்டால், உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைத்து விடும்.
6. மேலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் எப்போதும் நீங்கள்
நடந்து கொள்வதையே பழகுவார்கள். இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால்
அவர்களும் போக போக சாப்பிடாமல் தான் இருப்பார்கள். பின் அவர்கள் ஆரோக்கியம்
தான் பாதிக்கப்படும். ஆகவே அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க
நினைப்பவர்கள், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், அவர்களும் அதையே
பின்பற்றுவார்கள்.
7. காலையில் உண்ணும் போது வேண்டுமென்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான
தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடலும் ஆரோக்கியமாக
இருப்பதோடு எடையும் கூடாமல் அளவாக இருக்கும்.
8. வேலைக்குச் சென்று சிடுசிடுவென டென்சனாக இருக்கிறீர்களா? அகற்கு காரணம் வேலைப்பளு அல்ல. அதற்கு காரணம் காலை உணவை உண்ணாதது ஆகும்.
எனவே காலை உணவை சாப்பிடுங்க!
அன்றைய தினத்தை ஆரோக்கியமா ஆரம்பிங்க!!
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!