எங்கேமீடியாக்கள்...? பல்லாயிரக்கணக்கானோர் பர்மாவில் கொலை

படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு கால் சுளுக்கு....

நாட்டின் ஜனாதிபதி, குடும்பத்துடன் கோவா பயணம்...
ஏழு ஆண்டுகளாக காவல் துறைக்கு உழைத்த நாய் மரணம்...
மழை வேண்டி கழுதையை மனம் முடித்த வாலிபர்...
அழகிப் போட்டிக்கு பங்கு பெற முடியாத நடிகை கதறல்
...
இன்னும்... இன்னும்...

சொல்லிக் கொண்டே போகலாம்
இன்றைய சூடான செய்திகள்.



இதையெல்லாம் சொல்லும் மீடியாக்கள்
பல்லாயிரக்கணக்கானோர் பர்மாவில்
கொலை செய்யப்படும் கொடூரத்தை
சொல்ல மறுக்கிறது அல்லது மறைக்கிறது...?

எங்கேமீடியாக்கள்...?

கண்ணுக்கெதிரே தன்னுடைய பிஞ்சுக்
குழந்தைகளும், கணவனும்
கொலை செய்யப்படுகிறார்கள்..
.
எங்கேமீடியாக்கள்...?

தாயின் கரங்களையும் குழந்தையின்
கரங்களையும் ஒன்றாக கட்டி
கடலிலே வீசப்படுகிறார்கள்...
!
எங்கேமீடியாக்கள்...?

நாய் வேட்டையில் கூட
இத்தனை உடல்கள் இருக்காது.
மனித வேட்டையில்
குவியல் குவியலாக
பல்லாயிரக்கணக்கானோர்.
..
எங்கேமீடியாக்கள்...?

மீடியாக்களே..!
நாங்கள் நோன்பை துறக்கும் செய்தியை
காட்ட வேண்டாம்.
பர்மாவில் உயிரை துறக்கும் செய்தியை
காட்டுங்களேன்...!
இறைவா...!
உன்னிடம் முறையிடாமல்
வேறு யாரிடம் முறையிடுவது?
அவர்களுக்கு உரிய பாதுகாப்பை
கொடுப்பாயாக...!
அவர்களுக்கு மன தைரியத்தை
கொடுப்பாயாக...!
அவர்களுக்கு மறுமையில் சுவனத்தை
கொடுப்பாயாக...! ஆமீன்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!