பங்களாதேஷ்:மஸ்ஜிதில் இடி-மின்னல் தாக்கி இமாம் உள்பட 13 பேர் மரணம்!

Imam among 13 dead as lightning strikes Bangladesh mosque
டாக்கா:வடகிழக்கு பங்களாதேஷில் இடி-மின்னல் தாக்கி மஸ்ஜிதில் இருந்த இமாம் உள்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தலைநகர் டாக்காவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஸுனாம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஸரஸ்வதிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தகரம் மற்றும் புற்களை உபயோகித்து கட்டப்பட்டிருந்த மஸ்ஜிதின் மீது பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் தாக்கியது. இவ்வேளையில் மஸ்ஜிதில் 35க்கும் மேற்பட்ட மக்கள் ரமலானின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர். 13 பேரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!