13 Aug 2012

கொழும்பு:இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுண தீவின் இரு நூறுவில் என்ற கிராமத்தில் அமைந்துள்ள முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய தினம் இரவு தற்காலிக வசிப்பிடத்தில் தங்கியிருந்த முஸ்லிம் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார்.
1980-ம் ஆண்டு இக்கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான வன்முறை காரணமாக வெளியேறியிருந்தனர்.
போர் ஓய்ந்த பின்னர் தமது மீள் குடியேற்றத்திற்காக அங்கு தற்காலிக பள்ளிவாசலொன்றை அமைத்ததோடு தற்காலிக குடிசைகளையும் அமைத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த அமைச்சர் ரவுஃப் ஹக்கீம், பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார்.
அந்தப் பகுதியில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத சிலரின் நடவடிக்கையாகவே தான் இதனை கருதுவதாக அவர் கூறினார்.
2 comments:
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு சில மணி நேரங்களில் இருநூறுவில் கிராமத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் குறித்த பெண் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய இருவரை குறித்த பெண் அடையாளம் கண்டுள்ளார். இவர்களில் ஒருவர் தற்போது கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.இந்தத் தாக்குதலையடுத்து கிராமத்திற்குள் அத்துமீறிய சிலர் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றைத் தீவைத்துள்ளனர்.காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்த் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இனங்களுக்கிடையே முறுகல் ஏற்படுத்தும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லையெனத் தெரிவித்தார்.யுத்தத்தின் போது இடர்பெயர்ந்த மக்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்ந்து வருவதாகவும், முஸ்லிம்கள் மீள் குடியமர்வதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இது இருக்கக் கூடும் என நம்புவதாக அமைச்சர் பி.பி.சி செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.
அந்தப் பகுதியில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதி காவல் நிலையமொன்றை அங்கு அமைப்பதன் அவசியம் பற்றி கிழக்கு பிராந்திய துணை காவல்துறை மா மா அதிபரிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு சில மணி நேரங்களில் இருநூறுவில் கிராமத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் குறித்த பெண் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய இருவரை குறித்த பெண் அடையாளம் கண்டுள்ளார். இவர்களில் ஒருவர் தற்போது கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.இந்தத் தாக்குதலையடுத்து கிராமத்திற்குள் அத்துமீறிய சிலர் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றைத் தீவைத்துள்ளனர்.காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்த் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இனங்களுக்கிடையே முறுகல் ஏற்படுத்தும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லையெனத் தெரிவித்தார்.யுத்தத்தின் போது இடர்பெயர்ந்த மக்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்ந்து வருவதாகவும், முஸ்லிம்கள் மீள் குடியமர்வதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இது இருக்கக் கூடும் என நம்புவதாக அமைச்சர் பி.பி.சி செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.
அந்தப் பகுதியில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதி காவல் நிலையமொன்றை அங்கு அமைப்பதன் அவசியம் பற்றி கிழக்கு பிராந்திய துணை காவல்துறை மா மா அதிபரிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். --http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=11374:2012-08-13-17-21-04&catid=35:local&Itemid=48
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!