திருக்குர்ஆனின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் – யூசுஃப் எஸ்டஸ்!

Shaikh Yousuf Estes
துபாய்:திருக்குர்ஆனை அதிகமாக புரிந்து, எல்லா பிரிவு மக்களுடனும் அதிகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உலகில் அனைவருக்கும் திருக்குர்ஆனின் நற்செய்திகளையும், மகத்துவங்களையும் புரியவைப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும் என்று பிரபல அமெரிக்க அறிஞர் யூசுஃப் எஸ்டஸ் கூறியுள்ளார்.

பதினாறாவது துபாய் புனித திருக்குர்ஆன் விருது தொடர்பாக வழங்கப்படும் இவ்வாண்டிற்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதை பெறும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:திருக்குர்ஆனின் நற்செய்திகளும், சிந்தனைகளும் உலகின் குறைந்த சதவீத மக்களுக்கு மட்டுமே தற்பொழுது புரிந்துள்ளது. இதர மக்களுக்கும் இந்த சிந்தனைகளை கொண்டுசேர்ப்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனிடம் பதில் அளித்தாக வேண்டும் என்று யூசுஃப் எஸ்டஸ் கூறினார்.
துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முஹம்மது ராஷித் யூசுஃப் எஸ்டஸுக்கு சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை வழங்கினார்.
திருக்குர்ஆன் ஓதுதல் போட்டியில் முதல் பரிசை குவைத்தைச் சார்ந்த யாஸீன் பின் ஹஸ்ஸன் பெற்றார். இரண்டரை லட்சம் திர்ஹம் முதல் பரிசாகும். பங்களாதேஷைச் சார்ந்த ஐனுல் ஆரிஃப் இரண்டாவது பரிசைப் பெற்றார். சாட் நாட்டைச் சார்ந்த யஃகூப் ஆதம் மூன்றாவது பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசாக இரண்டு லட்சம் திர்ஹமும், மூன்றாவது பரிசாக ஒன்றரை லட்சம் திர்ஹமும் பரிசாக அளிக்கப்பட்டன. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த முஹம்மது தாரிக்கும் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
கென்யா, சீனா, கொஸாவோ, புரூணை, சுரிநாம், ஜாம்பியா, சிங்கப்பூர், மொஸாம்பிக், நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் துவக்க கட்ட போட்டியிலேயே வெளியேறிவிட்டனர்.  91 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் புனித திருக்குர்ஆன் ஓதுதல் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!