கா.மு. குழந்தை சேக்காதிஅவர்களை பற்றிய சில நினைவுகள்:


கா.மு. குழந்தை சேக்காதிஅவர்களை பற்றிய சில நினைவுகள்:
 சிலர் பாரம்பரியத்தால் சிறப்பிடம் பெறுவதுண்டு ஆனால், பாரம்பரியமிக்க ம.மீ.செ. குடும்பக்கிளையில் தோன்றியிருந்தாலும் தன்னுடைய கல்விப்பணி, அமைதியான ஆளுமைகுணம், அல்லாஹ்வின் பள்ளிகளுக்காக உழைத்தல் என தனிச்சிறப்பியல்புகளால் மக்கள் மனதில் மேலும் நிறைந்திருந்தார்கள். குறிப்பாக...
1. இமாம் ஷாஃபி எனும் இன்றைய ஆலமரம் தழைக்க வித்திட்ட நிறுவனர்களில் ஒருவர்.
2. பட்டுக்கோட்டையில் முதன்முதலாக டுட்டோரியல் கல்வியகத்தை ஆரம்பித்து நடத்தியவர்.
3. மேலத்தெருவில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அமைய காரணியாக இருந்தவர்களில் ஒருவர், மேலும் அப்பள்ளி உருவாக அமீரகத்தில் தலைமையேற்று பொருளாதராத்தை திரட்டி வழங்கியவர்.
4. சமீபத்தில் சிறிது காலம் அப்பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவராக பங்காற்றியவர்.
5.கீழத்தெரு. ஜூம்ஆ பள்ளி கட்டுமானத்தின் போதும் அதற்காக தன் நேரத்தை ஒதுக்கி நன்கொடைகள் பெற்றுத் தந்தவர்.
6. அன்னாருடைய தந்தையும் கீழத்தெரு.ஜூம்ஆ பள்ளியின் நிர்வாகியாக இருந்துள்ளார்கள்.
7. இதற்கெல்லாம் மேல் தன்னுடைய அமைதி சுபாவத்தால் அனைவரின் உள்ளங்களை வென்றவர் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
குழந்தை சேக்காதி அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல நாடுவோர் அபுதாபியில் வசிக்கும் அன்னாருடைய மூத்த மருமகன் பஷீர் அஹமது அவர்களை 0555143963 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
யா அல்லாஹ் சகோதரர் குழந்தை சேக்காதி மறுமையில் வெற்றி பெற, மஃஷரில் உன்னால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் சுவர்க்கதிற்குரிய நல்லடியார்களில் ஒருவராக எழுப்புவாயாக! யா அல்லாஹ் நரகிலிருந்தும் பாதுகாப்பளிப்பாயாக. யா அல்லாஹ் ரஸூல் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் எனும் பாக்கியத்தை அன்னாரின் மீது அருள்வாயாக.

தகவல்:நன்றி...அதிரைஅமீன்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!