கவனம் : 'பொருள்' வாங்கும் முன் !
1986 ஆம் ஆண்டு நமது நாட்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் நுகர்வோர் உரிமை நலன்களைப் பெருமளவு நாம் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எடுத்துக்காட்டாக,
1. ஒரு பொருளை வாங்கும்போது அதில் குறைபாடு காணப்பட்டால், நுகர்வோர் அப்பொருளை வாங்க மறுக்கலாம்.
2. பேருந்தில் பயணிக்கும் ஒருவர் தன் குழந்தைக்கு அறை டிக்கட் வாங்கிருந்தாலும் அக்குழந்தை உட்காருவதற்குரிய இடத்தை ஒதுக்குவது ஒரு நடத்துனரின் கடமை என்பதை சுட்டிக்காட்டலாம்.
3. குறிப்பாக பொருளின் எடை அளவில் குறைபாடு இருந்தால் அப்பொருளை வாங்க மறுக்கலாம்.
இதுபோன்று நுகர்வோரின் கடமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்...
நுகர்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. பொருளை வாங்கும் முன் அப்பொருள் உற்பத்தி செய்த நாள், பயன்படுத்தப்பட வேண்டிய கால அவகாசம், தர மதிப்பீடு போன்றவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
2. அதேபோல் பொருளின் எடை, விலை, சுத்தம் ஆகியவற்றை கண்காணித்தல் அவசியம்.
நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் செய்யும் முறை :
1. புகாரில் பெயர், முகவரி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
2. புகாருக்குரிய பொருட்கள், சேவை குறைபாடு, சேதம் ஏற்பட்டிருந்தால் அதன் மதிப்பீடு போன்றவற்றில் முழு விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
3. பொருள் வாங்கிய ரசீது இணைத்தல் அவசியம்.
4. புகாரை மாவட்ட/மாநில அளவில் அனுப்புவதாக இருந்தால் நான்கு நகல்களும், தேசிய அளவில் அனுப்புவதாக இருந்தால் ஆறு நகல்களும் இணைக்க வேண்டும்.
5. புகார் அனுப்பிய 90 நாட்களில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
6. புகாரை கீழ்கண்ட முகவரியில் மாவட்ட/மாநில/தேசிய குறை தீர மன்றத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். புகாருக்கு எவ்வித கட்டணமும் கிடையாது.
Thanjavur District Forum
Elango Commercial Complex
Court Road
Needhi Nagar
Thanjavur 613002
Tel : 04362-272507
Tamil Nadu State Consumer Disputes Redressal Commission,
Slum Clearance Board Building, II Floor,
(Southern Wing), No.212, R.K. Mutt Road, Mylapore,
CHENNAI – 600 004
Phone: 044 24951718 / 24640687
E-mail: scdrc@tn.nic.in or
tn-sforum@nic.in
National Consumer Disputes Redressal Comission
A Wing, 5th Floor, Janpath Bhawan
Cannaught Place
New Delhi 110001
Fax: (011) 23712456
Thank you FOR Tambi Nijam
சமூக "விழிப்புணர்வு" பக்கங்கள்

4 comments:
சகோதர் நிஜாம் மிக பயனுள்ள செய்தியே நமக்கு தந்துள்ளார் நன்றி நிஜாம் அவர்களுக்கு....
அன்பு சகோதரர் சேக்கனா M. நிஜாம் மிக பயனுள்ள செய்தியே நமக்கு தந்துள்ளார்
நன்றி:: சமூக "விழிப்புணர்வு"பக்கங்கள் நிஜாம் அவர்களுக்கு....
மிக பயனுள்ள செய்தியே நமக்கு தந்துள்ள
அன்பு சகோதரர் சேக்கனா M. நிஜாம் அவர்களை அதிரை ஈஸ்ட் மிக பாராட்டுக்கின்றது
நன்றி : "நிஜாம்"
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!