நியூசிலாந்து எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது
பெங்களூர்:நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி  கைப்பற்றியது.

பெங்களூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 365 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  அதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர்  2வது இன்னிங்சில் நியூசிலாந்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 261 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான டெண்டுல்கர் 27,  புஜாரா 48,  சேவாக் 38,  கம்பீர் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டோனி 48,  விராத் கோஹ்லி  51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  டோனியும், கோஹ்லியும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
முன்னதாக முதல் டெஸ்ட்டில் இந்தியா அணி வெற்றி பெற்றிருந்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராத் கோஹ்லிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!