அதிரை பைத்துல்மால் மாதாந்திரக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் !!!



கடந்த 31-08-2012 அன்று நடந்த அதிரை பைத்துல்மால் மாதாந்திரக் கூட்டத்திற்கு வழக்கறிஞர் A. அப்துல் முனாப் அவர்கள் தலைமையிலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட AAMF’ன் ஒருங்கிணைப்பாளரும், சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய ஹாஜி ஜனாப்  M.S. ஷிஹாப்தீன் மற்றும் அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. S.H. அஸ்லம் ஆகியோர் முன்னிலையில் இனிதே துவங்கியது.





நிகழ்ச்சியின் நிரலாக...

1. கிராஅத் ஹாஜி. ஜனாப் M.Z. மாலிக் அவர்கள்

2. வரவேற்புரை ஹாஜி. ஜனாப் C.M. இபுராஹீம் அவர்கள்

3. மாதாந்திர நடப்புகளைப் பற்றி ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது அவர்கள் அழகாகத் தொகுத்து வழங்கினார்கள்.

4. ‘அனைவருக்கும் உயர்கல்வி’ என்ற  புதிய திட்டம் ஹாஜி ஜனாப் A.S. ஜலீல் அவர்களால் இக்கூட்டத்தில் தாக்கல் செய்து வாசிக்கப்பட்டன. ( இறைவன் நாடினால் விரைவில் இத்திட்டத்தைப்பற்றிய அறியத் தகவல்கள் பதிவாக.....)

5. நமதூரைச் சேர்ந்த ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவர்களால்  கைவிடப்பட்டோர், வட்டிக்கடனில் மூழ்கியிருப்போர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர் போன்றவர்களுக்கு தையல் இயந்திரங்கள், வெட் கிரைண்டர், நிதி உதவிகள் போன்றவை சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

6. கூட்டத்தின் தீர்மானமாக 'உயர்கல்வி திட்டம்' பற்றி தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் ஆலோசிப்பது என்றும், நகைக்கடன் உயர்வு பற்றி நிர்வாகிகளிடம் ஆலோசித்தல், பல்லாவரம் கட்டிடம் விற்பது விஷயமாக நிர்வாகிகளிடம் கலந்து உடன் முடிவு எடுத்தல் போன்றவை நிறைவேற்றப்பட்டன.

7. இறுதியாக நன்றியுரை ஹாஜி. ஜனாப் N.சிபஹத்துல்லாஹ் அவர்களால்
வாசிக்கப்பட்டு ‘துஆ’வுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன.
 நன்றி -அதிரைஎக்ஸ்பிரஸ் 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!