ஜோக்ஸ் டைம்....

மாடி போர்ஷனா?
வீட்டு புரோக்கர் : அவசரமா வீடு வேணும்னு கேட்டீங்க. ஆனா, மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?"
மற்றவர் : அட போய்யா, என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு! ..

.
கப்பல் மூழ்குதா? கன்னத்துல கை வெக்காதீங்க!!!
ஒருவர் : என்ன தான் கப்பலே மூழ்கினாலும், கன்னத்துல மட்டும் கை வெக்கக்கூடாது. மற்றவர் : எதுக்கு? ஒருவர் : கன்னத்துல கை வெச்சா அப்புறம் நீச்சல் அடிக்க முடியாதேப்பா!!! .
.

நான் ஆபரேசன் மட்டும்தான் செய்வேன்
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம் செய்யணும்
டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன். காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார். ..

சூப்பர் அப்பா!!!
பெண் : நான் என் லவ்வரோட பைக்குல போகுறத என் அப்பா பாத்துட்டாங்கடா... ஆண் : அச்சச்சோ... அப்புறம் என்ன நடந்துச்சு...?
பெண் : வேற என்ன, பஸ் காச திரும்ப கேட்டு வாங்கிட்டாருடா... ..

தெய்வீக காதல்!!!
காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?
காதலன் : ஏன்னா, நம்ம காதல் தெய்வீக காதல்! அதான்டா செல்லம். ..
.
காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்!!!
நண்பன் 1 : மச்சான் காதலுக்கும், நட்புக்கும் என்னடா வித்தியாசம்?
நண்பன் 2 : மச்சி "காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, அத காக்கா ஈஸியா தூக்கிட்டு போயிடும். ஆனா நட்பு என்பது ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான்டா!" ...

மனைவி சமைச்சா?
மனைவி : ஏங்க இப்படியே நான் சமைச்சு போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?
கணவன் : என்னோட எல்.ஐ.சி பணம் தான்டி சீக்கிரம் கிடைக்கும். ...



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!