360 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் மொகாலய மன்னர் ஷாஜஹான், அவரது மனைவி மும்தாஜ்
நினைவாக கல்லறை காதல் ஓவியமான தாஜ்மஹாலை கட்டினான். இதை கட்ட 22 வருடங்கள் ஆனது.
காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை
'தாஜ்மஹால்' கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு மாதிரி
தாஜ்மஹாலை கட்ட துபாய் கட்டுமானக் கம்பெனி முடிவு செய்துள்ளது.
அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய்
நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட பால்கன் அதிசய
நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது.
இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா
கட்டிடத்திற்கு 100 கோடி டாலர் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக
விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7
கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன்
கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும்
இருக்கும்.
திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான். அதை கொண்டாடுவதற்கு இந்தோனேசிய பாலிதீவு
மற்றும் பல அழகிய இடங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். ஆனால் இனி அவர்கள் துபாயின்
தாஜ் அரேபியா என்ற இந்த கட்டிடத்திற்குதான் வருவார்கள் என இந்த மெகா திட்டக்
கம்பெனியின் சேர்மன் அருண் மெஹ்ரா கூறியுள்ளார்.
இன்றைய நவீன உலகில் விவாகரத்துகள் அதிகரித்துவரும் நிலையில் முன்பு போல் காதல்
மற்றும் உணர்ச்சிகளை உணரவைத்து திருமணப் பந்தத்தின் அவசியத்தை இது ஞாபகப்படுத்தும்.
துபாயின் இந்த பால்கன் அதிசய நகரமானது, உலக அதிசயங்களாக விளங்கும் பிரமிடுகள்,
தொங்கும் தோட்டம், ஈபிள் டவர், தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் பைசா நகரச்
சாய் கோபுரம் ஆகியவற்றை உள்ளடக்கி நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் என்று
கூறப்படுகிறது.

1 comments:
பணம் காசுகளை வைத்து என்ன செய்வது என்று தெரிய வில்லை இது போன்று ஆடபரம் செய்கின்றார்கள்.இருக்க கூடியவன் கொடுபதற்க்கு மனம் இல்லை இல்லாதவனுக்கு கொடுக்கணும் என்று மனம் என்ன செய்வது காலத்தின் கொடுமை என்றுதான் சொல்லவேண்டும்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!