
மதுரை கோவில் பாளையத்தை சேர்ந்தவர், முபாரக் (வயது 40). இவர் குடும்பத்தினருடன் வேலூருக்கு காரில் சென்றார். நேற்று இரவு திருச்சி வழியாக மதுரைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அந்த கார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருச்சி-மதுரை ரோட்டில் சாரநாதன் கல்லூரி அருகே சென்றது. அப்போது சிறுநீர் கழிப்பதற்காக, காரை முபாரக் நிறுத்த முயன்றார். அப்போது சென்னையில் இருந்து மதுரையை நோக்கி ஒரு ஆம்னி பஸ் வேகமாக வந்தது. பஸ்சை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் ஓட்டி வந்தார். முன்னால் சென்ற முபாரக்கின் கார், திடீர் என நிறுத்தப்பட்டதால் ஆம்னி பஸ் டிரைவர் செல்வராஜ் நிலை தடுமாறினார். கார் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் காரின் பின்புறம் ஆம்னி பஸ் மோதியது.
மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் ரோட்டின் இடது புற பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபாரக், உறவினர்கள் லட்சுமி, தாரணி, வாசுகி உள்பட 5 பேர் காயமடைந்தனர். அதேபோன்று ஆம்னி பஸ்சில், இருந்த 15 பயணிகளுக்கு கை, கால், முகங்களில் காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், திருச்சி போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டாள் ஈஸ்வரி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
காயமடைந்த பயணிகளை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 comments:
தலைக்கு வந்தது தலைபாளுடன் போய் விட்டது என்று ஒரு பழப்மொழி உண்டு அதுதான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.வாகனத்தில் பயணம் செய்யும் யாராக இருந்தாலும் நம் தேவைக்கு நிறுத்தும் போது பின்னாடி வரக்கூடிய வாகனகளுக்கு இடையூர் இல்லாமல் நிறுத்தவேண்டும். அதுதான் நமக்கும் நல்லது வரும் வாகனத்துக்கும் நல்லது. இங்கு இரண்டு வாகனத்திலும் உயிர் சேதம் இல்லாமல் போய் விட்டது நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.
சாலை விதைகளை பின்பற்றி கவனத்துடன் பயணம் மேற்கொள்வது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.
மிக்க நன்றி பதிவுக்கு !
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!