இந்தியாவில் மார்பக புற்று நோய்க்கு ஆண்டுதோறும் 90 ஆயிரம் பெண்கள்
பலியாகின்றனர். இது மற்ற நோய்களின் தாக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதேநிலை
நீடித்தால் வருகிற 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8 பேரில், ஒரு பெண்ணுக்கு
மார்பக புற்றுநோய் பாதிப்பு அபாயம் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு
தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோய் பாதிப்பை மிகவும் காலதாமதமாக பரிசோதிப்பதன் மூலம் அவற்றை
குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதா?
என்பதை முன்கூட்டியே பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்கள்
உள்ளனர்.
பொதுவாக உலகம் முழுவதும் 40 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மார்பக
புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் கர்ப்பபை
மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பினால் ஏராளமான பெண்கள் இறக்கின்றனர். அதற்கு
முன்னோடியாக மார்பக புற்றுநோய் விளங்குகிறது. எனவே 30 வயதில் இருந்தே பெண்களுக்கு
மார்பக புற்றநோய் பரிசோதனை நடத்துவது அவசியம் என மத்திய அரசு கருதுகிறது.
அவர்கள் கட்டாயம் மார்பக புற்றுநோய் சோதனை செய்து கொள்வது அவசியம் என
வலியுறுத்தி உள்ளது. அதற்காக மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. சமுதாய சுகாதார
மையம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை ஆஸ்பத்திரிகளில் அதற்கான முகாம்கள்
நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் 21 மாநிலங்களில் இந்த பரிசோதனை முகாம்கள்
நடைபெற்று வருகிறது.
இதன்மூலம் அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும்
வாய்ப்பு ஏற்படும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி பேறுகால நர்சு உதவியாளர்கள்
வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்பக
புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் ஏற்கனவே
தொடங்கி நடைபெற்று வருகிறது. அரியானா மற்றும் ராஜஸ்தானில் விரைவில் தொடங்கப்பட
உள்ளது.


2 comments:
மிக்க நன்றி பயனுள்ள பகிர்வுக்கு
இவ்விசயத்தில் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது
மார்பக புற்றுநோய் பாதிப்பை மிகவும் காலதாமதமாக பரிசோதிப்பதன் மூலம் அவற்றை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதா? என்பதை முன்கூட்டியே பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது பெண்களின் கட்டாயம்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!