செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட படு மோசமானதாக மாறியிருக்கிறது பேஸ்புக், டிவிட்டரைப் பார்க்கும் பழக்கம் என்று கூறுகிறது ஒரு ஆய்வு.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை
நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப்
பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு
நடந்தது.
ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனர். அதில்
செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர்
உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய
வந்ததாம்.
செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம்
தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர்
பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு
சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம். செக்ஸுக்காக கூட இப்படி
மெனக்கெடுவதில்லையாம்.
இன்னும் படுக்கை அறையில் பக்கத்தில் மனைவியோ அல்லது காதலியோ இருந்தால்
கூட அப்போது கூட பேஸ்புக் அல்லது டிவிட்டர் பற்றி நினைக்கிறார்களாம்.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம்,
விளையாட்டு என அனைத்தையும் தகர்த்து்த் தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த
பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.
3 comments:
ஆம் உண்மையான விசயம்தான் இப்போது உள்ள காலகட்டகளில் ஆண் பெண் இளமையானவர்கள் முதியோர்கள் என்று பாராமல் முக புத்தகம் போன்ற இணையத்தளத்தில் அதிகம் பயன் படுத்துகிறார்கள்.
தாங்கள் எழுதிள்ள கருத்துக்கள் ஏற்றுகொள்வதாக இருந்தாலும் இப்பொழுது உள்ள கால கட்டத்தில் ஆடம்பரப்பொருள்கள் என்று நாம் நினைத்ததெல்லாம் அத்தியாவசியப்பொருளாய் ஆகிவிட்டது.நாம் தான் அதில் உள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.இது விஞ்சான உலகம் நாளுக்கு நாள் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அறிமுகம் ஆகி கொண்டு இருக்கின்றது. இன்று ஆடம்பரம் என்று நினைப்பதெல்லாம் நாளை அத்தியாவசியமாக ஆகி விடுகிறது.ஆகவே எதையும் தேவைக்கு பயன் படுத்தினால் எந்தப்பிரச்சனையும் கிடையாது என்பது என் கருத்து.

Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!