திருவாரூர் - பட்டுக்கோட்டை ரயில்பாதை நாளை முதல் மூடல் !!!


அக். 18 :அகலப் பாதை பணிகள் நடைபெறவிருப்பதை ஒட்டி திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் ரயில்பாதை நாளை 19ம் தேதியுடன் மூடப்படுகின்றன.
இந்திய ரயில்வேயில் அனைத்து ரயில்பாதைகளும் அகலப்பாதையாக மாற்றும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில் தெற்கு ரயில்வேயில் திருச்சி மற்றும் மதுரை கோட்ட பகுதிகளில் உள்ள காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்படாமல் மீட்டர் கேஜ் பாதையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர்கேஜ் பாதை மூடப்பட்டு அகலப்பாதை பணிகள் நடந்து வருகின்றன.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வழியாக பட்டுக்கோட்டை வரையில் மீட்டர் கேஜ் பாதையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் 19ம் தேதியுடன் திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையிலான மீட்டர்கேஜ் ரயில்பாதை மூடப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இதயைடுத்து இவ்வழியே இயங்கி வந்த, திருவாரூர்-திருத்துறைப்பூண்டி பயணிகள் ரயில் 2, திருவாரூர்-பட்டுக்கோட்டை பயணிகள் ரயில்கள் 4 என மொத்தம் 6 பயணிகள் ரயில்கள் 19ம் தேதியுடன் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் கடைசி மீட்டர்கேஜ் :
நாளை 19ம் தேதியுடன் மூடப்படும் இந்த மீட்டர்கேஜ் பாதைதான், தெற்கு ரயில்வேயில் மலைப்பாதை தவிர அகலப்பாதையாக மாற்றப்படாமல் உள்ள கடைசி மீட்டர்கேஜ் இதுதான். இந்த பாதை மாற்றப்படுவதுடன் தெற்கு ரயில்வேயில் அனைத்தும் அகலப்பாதை மயமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நன்றி:அதிரைஎக்ஸ்பிரஸ் 

5 comments:

ஹபீப் HB said...

ஒழுக்கா ஓடி கொண்டுக்யிருந் திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர்கேஜ் மூட போறக்கலா ஆகா வடை போச்சை விலங்கின மாதிரித்தான்.

சேக்கனா M. நிஜாம் said...

மாஷா அல்லாஹ் !

அகல ரயில்பாதை பணிக்கான ஆ'ரம்ப'க்கட்ட வேலைகளுக்கு ஆயத்தமாவது மகிழ்வைத் தருகின்றன

இறைவன் நாடினால் ! தொடரட்டும் பணிகள் எவ்வித குறிக்கீடுகள் இன்றி

சேக்கனா M. நிஜாம் said...

அகலரயில் பாதை பணி தொடர்பாக கடந்த களஆய்வின் போது ரயில்வேயுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் 'மன்னார்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை பணிகள் நிறைவுறும் முன்பே திருவாரூர்-காரைக்குடி பணிகள் அனைத்தும் நான்கு முதல் ஆறு ஆண்டுக்குள் நிறைவுறும்' என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ஜலீல்.M said...

1927 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய ரயில் இன்று 18/10/2012 வரை முடிந்தது. திருவாரூர்-காரைக்குடி பணிகள் அனைத்தும் நான்கு முதல் ஆறு ஆண்டுக்குள் நிறைவுறும்' என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ்.

Adiraieast said...

1927 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய ரயில் இன்று 18/10/2012 வரை முடிந்தது. வரலாற்றுச் சிறப்புமிகு அறிவிப்பு. //இந்த மீட்டர்கேஜ் பாதைதான், தெற்கு ரயில்வேயில் மலைப்பாதை தவிர அகலப்பாதையாக மாற்றப்படாமல் உள்ள கடைசி மீட்டர்கேஜ் இதுதான். // நம் பகுதி கடைமடை பகுதி என்பதாலோ??

2017க்கு முன் அகலப்பாதை பணிகள் முடிந்துவிடுமா?? விரைவில் திறக்கப்படும் என நம்புவோம் இன்ஷா அல்லாஹ். முடிந்தது. . இன்ஷா அல்லாஹ்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!