குர்பானி கொடுத்தல்

 



குர்பானி கொடுத்தல் பதிவுN.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்  
-----------------------------------
அஸ்ஸலாமு அலக்கும்
வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை

கொடுக்கலாம்.இவற்றில் முடமாகவோ,குருடாகவோ
பிணியாகவோ முதலிய தீங்கில்லாத பிராணியாக




இருக்க வேண்டும்.அறுத்த கறியை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை தானும் தனது பங்காளிகலும்,இரண்டாவது பங்கை குடும்பத்தாருக்கும்,மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பது வாஜிபாகும்.
குர்பானி கொடுப்பதில் இரண்டு சுன்னத்துகள் உண்டு அவை
(1) துல்ஹஜ்ஜு மாதம் பிறை கண்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரைக்கும் முடி இறக்காமலும், நகம் வெட்டாமல் இருப்பதும்
(2) தன் கையால் அறுப்பதுமாகும் (மற்றொருவரை வைத்து அறுத்தால் அறுத்து முடியும்
வ்ரை அருகில் நிற்க வேண்டும் கத்தியை எடுக்காமல் தொடர்ந்து அறுப்பது சிறந்தது)
மாடு,ஒட்டகைகளை ஏழு பேர் சேர்ந்து கூட்டில்வாங்கிக் கொடுக்கலாம்.உடையவன் இதில்
கொஞ்சம் உண்பது நன்மையாகும்.
குர்பானி கொடுக்கும் மாமிசத்தை விலைக்கு விற்பதும்,காபிர்களுக்கு கொடுப்பதும் உரித்தவர்களுக்கு கூலிக்காக மாமிசத்தை கொடுப்பதும் ஹறாமாகும்
அறுப்பதில் ஒன்பது சுன்னத்துகளுண்டு அவை; அறுக்கப்படும் பிராணியை மெதுவாக
இழுத்து வருதலும் அதற்குத் தண்ணீர் கொடுத்தலும்,அறுப்பவர் ரசூல்(ஸல்)அவர்களுக்கு
சலவாத்தும்,சலாமும் சொல்லி பிஸ்மில் சொல்லுதலும்.அறுப்போறும்,அறுக்கப்படுவதும்
க்ஃபாவை முன்னோக்கிக் கொள்ளுதலும்,அறுக்கப்படுவதின் வலது பக்கம் மேலாக இட்து
பக்கத்தைக் கீழாக்கிக் கொள்ளுதலும்,அறுக்கும் கருவியை தீட்டிக் கூராக்கிக் கொள்ளுதலும் குரல்வளையைச் சுற்றின நரம்பு இரண்டையும் அறுத்தலும்,ஒட்டகையை
நான்கு கால்களையும் நெறுக்கிக் கட்டிக்கொள்ளுதலும்,ஆடு ,மாடுகளை மூன்று கால்களைப் பிடிதுக்கொள்ளுதலும்,முடியாவிட்டால் கால்களை கட்டிக்கொள்வ்துமாகும்
குரல்வளை முடிச்சிக்கு மேலே அறுத்தலும்,பிடரிப்புறம் அறுத்தலும் தொடர்பாய் அறுக்காம்ல் க்ருவியை எடுத்தெடுத்து அறுத்தலும் ஒன்றை அறுத்த கருவியை கழுவாமல் ம்ற்றொன்றை அறுப்பதும் ஹறாமாகும், அதை உண்பதும் ஹறாமாகும்.
அறுப்பதில் மக்றூஹூகள் பத்துண்டு அவை; சிறு பிள்ளை அறுப்பதும்,கண்பார்வை
அற்றவர்கள் அறுப்பதும் புத்தி சுவாதீனம் இல்லாதவர் அறுப்பதும்,மது உண்ணடவர்
அறுப்பதும்,பிஸ்மில் சொல்லாமல் அறுப்பதும்,இரவில் அறுப்பதும்,அறுக்கபடும் பிராணி
பார்க்க கருவியை தீட்டுவதும் ஒன்று பார்க்க ம்ற்றொன்றை அறுப்பதும்,உயிர் போகுமுனஅதன் உறுப்புக்களை அறுப்பதும்,துடிக்க விடாமல் அமுக்கிக் கொள்ளுதலுமாகும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது மார்க்கத்தை புரிந்து நடந்துகொள்ள அருள்புரிவானாக ஆமீன் வாசகர்கள் அனைவருக்கும்
 
 Advanced ஈத் முபாரக்
N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்
New York, U.S.A

6 comments:

அப்துல் ஜலீல்.M said...

பதிவுக்கு முதலில் நன்றி.

சரியான நேரத்தில் குர்பானி கொடுப்பது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கின்‌றார் நண்பர் அப்துல் வாஹித்

ஹபீப் HB said...

அருமையான பதிவு அருமையான விலக்கம். பதித்ததற்கு மிக நன்றி N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார் காக்கா அவர்களுக்கு.

Adiraieast said...

குர்பானி கொடுப்பது பற்றி அருமையான விளக்கம்

வாழ்த்துகள் காக்கா

Anonymous said...

அருமையான பதிவு அருமையான விளக்கம். பதித்ததற்கு மிக நன்றி N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அதிரை.மெய்சா said...

குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து, நிய்யத்தும்,ஏழைகளுக்கும் கொடுப்பது வாஜிபாகும்.என அருமையான விளக்கம்.N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

அஸ்ஸலாமு அலைக்கும்
முதலில் பதிவுக்கு மிக்க நன்றி
பின்னூட்டமிட்ட அருமை நண்பர் அப்துல் ஜலீல் adirai east,சகோ.ஹபீப் HB,பாக்கர்
முஹமது,அஸீம் அனைவருக்கும் என் வாழ்த்துக்கலும்,துவாவும் & advanced ஈத் முபாரக்
அன்புடன்
வாஹித்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!