டெங்கு நோயின் அடையாளங்கள்,நோய் அடையாளங்கள் வெளிப்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?






டெங்கு நோயின் அடையாளங்கள்
1. கடுமையான காய்ச்சல
2. தலைவல
3. கண்களுக்கு கீழாலும் தசைகளிலும் மூட்டுக்களிலும் வலி ஏற்படுதல்
4. பசியின்மை/உணவில் விருப்பின்மை.
5. வாந்தி ஏற்படுவதோடு தோலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுதல் 

நோய் அடையாளங்கள் வெளிப்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?
1. காய்ச்சலின் போது ஓய்வெடுக்க வேண்டும்.
2. காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நீரினால் உடம்பு முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
3. ஒவ்வொரு 6 மணித்தியாலயத்தின் பின்னரும் பெரசெடமோல் வகையைச் சார்ந்த வில்லைகளை உட்கொள்ள வேண்டும்.
4. இரத்தப் போக்கிற்கான அடையாளங்கள் வெளிப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
1. நீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும்.
2. கொங்ரீட் கூரைகள், பீலிகள், கான்கள் போன்றவற்றிலுள்ள இலைகுலைகளை அகற்றி, நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
3. சூழலிலுள்ள தண்ணீர் தேங்கக் கூடிய சிரட்டைகள், போத்தல்கள்,பொலித்தீன் பைகள் போன்றவற்றை புதைத்து விட வேண்டும்/எரித்து விட வேண்டும்.
4. பாவிக்கக் கூடிய பாத்திரங்கள், வாளிகள் போன்ற வற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். 
5. பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
6. எறும்பு வராது மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
7. குளிரூட்டிகளிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும்.
8. தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்த்து விடவும்.
9. தண்ணீர் தாங்கிகளில் வாளியை விட்டு நீர் எடுக்காதபோது அங்கும் நுளம்புகள் பெருகலாம். எனவே, அதன் மூடியை ஒழுங்காக மூடவேண்டும். மூடி இல்லாதபோது மெல்லிய வலையினால் மூட வேண்டும்.
10. பழைய ரயர்களை அகற்றி புதைத்து விட வேண்டும்.

எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?
திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன.

எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும் ?
கண்களில் பின்புறம் வலி
தசை வலி
மூட்டு வலி
தோலில் சினைப்பு
வயிறு வலி,வாந்தி
டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு (தொற்றுமா) பரவுமா ?
இல்லை. நுளம்புக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது ?
நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.

டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா ?
முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா ?
டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின்,பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். 

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா ?
டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.

டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும் ?
டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது () டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.

மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு () ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். 


எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா ?
ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா ?
1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது ?
இந்த நுளம்பு இட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் நுளம்பு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

இந்த நுளம்பு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
டெங்கு நுளம்புகள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.கொசுவலை, நுளம்புகளை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா ?
டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி நுளம்புகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?
டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை? 
ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும். 


டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன ?
பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் நுளம்பு உற்பத்த்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே நுளம்புகள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் நுளம்புகள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.

    நன்றி :    மு.செ.மு.சபீர் அஹமது  +   சமுதாய      விழிப்புணர்வு 

7 comments:

ஹபீப் HB said...

அருமையான பதிவு முதலில் நன்றி.நாம் இருக்கும் இடம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும் எந்த ஒரு நோயும் வராது..

Unknown said...

அருமையான பதிவு முதலில் நன்றி.நாம் இருக்கும் இடம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும் எந்த ஒரு நோயும் வராது..

Padasalai said...

மிக மிக பயனுள்ள பதிவு, நன்றி !

vishwa said...

Thanks lot bhai

Anonymous said...

அருமை

Anonymous said...

அருமை

Unknown said...

Thank you

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!