அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளி​ன் நன்றிஅறிவிப்பு

முதல் மக்தப் பள்ளி ஆரம்பம்.



உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள் மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமானதொன்றாகிறது. இதைக்கருத்தில் கொண்டு அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் மற்றும் அதன் நிர்வாகிகளின் சீரிய முயற்சியின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட நான்கு இடங்களில் சிறார்களுக்கான குரான் ஓதும் பயிற்சிகளை மேற்கொள்வது என்ற முடிவையடுத்து, இதன் முதல் முயற்சியாக கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களின் வீட்டில், முதலாவதாக பயிற்சிகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நமதூரைச்சார்ந்த அனைத்து சிறுவர் சிறுமிகளும் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மார்க்க அடிப்படைக் கல்வியை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு, இதற்காக ஒத்துழைப்பு வழங்கி நிதி உதவிசெய்த கீழத்தெரு மஹல்லாவாசிகள் அனைவருக்கும் கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளின் சார்பாக நன்றிகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அதிரை கீழத்தெரு மஹல்லா - அமீரகம்

9 comments:

ஹபீப் HB said...

இன்ஷா அல்லாஹு இது முதல் படி இது போல் இன்னும் பல நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்கும் இந்த முயற்சி அல்லாஹு உதவியால் இன்னும் பல இடகளில் ஆரபமாக உள்ளது.நம் ஊரு மக்கள் இதை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும். நம் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை புகுட்டவும்.

Adiraieast said...

இன்ஷா அல்லாஹு இன்னும் பல இடங்களில் ஆரம்பமாக உள்ளது.நம் ஊரு மக்கள் இதை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும். நம் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை புகுட்டவும்.

Anonymous said...

இதன் முதல் முயற்சியாக கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களின் வீட்டில், முதலாவதாக பயிற்சிகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.




அதிரை.மெய்சா said...

முதல் மக்தப் பள்ளி ஆரம்பம்.

நமதூரைச்சார்ந்த அனைத்து சிறுவர் சிறுமிகளும் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மார்க்க அடிப்படைக் கல்வியை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். வாழ்த்துகள் !!!!!!!

சேக்கனா M. நிஜாம் said...

மாஷா அல்லாஹ் !

தொடரட்டும் மார்க்க சேவைகள்...

Unknown said...

இன்ஷா அல்லாஹு இது முதல் படி இது போல் இன்னும் பல நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்கும் இந்த முயற்சி அல்லாஹு உதவியால் இன்னும் பல இடகளில் ஆரபமாக உள்ளது.நம் ஊரு மக்கள் இதை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும். நம் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை புகுட்டவும். தொடரட்டும் மார்க்க சேவைகள்.

Unknown said...

இன்ஷா அல்லாஹு இது முதல் படி இது போல் இன்னும் பல நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்கும் இந்த முயற்சி அல்லாஹு உதவியால் இன்னும் பல இடகளில் ஆரபமாக உள்ளது.நம் ஊரு மக்கள் இதை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும். நம் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை புகுட்டவும். தொடரட்டும் மார்க்க சேவைகள்.

அதிரை.மெய்சா said...

நமது தெருவுக்கு அவசியத்தேவைகளில் மார்க்கக்கல்வி இதுவும் ஒன்று.அதுபோல் மார்க்க அறிவை எத்திவைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. திறம்படச்செய்ய வாழ்த்துக்கள்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

அஸ்ஸலாமு அலைக்கும்
மக்தப் பள்ளி நல்லதொரு முயற்சி இன்றைய சிறுவர்,சிறுமிகள் உலககல்வியோடு மார்க்க
கல்வியையும் பெற அருமையான சந்தர்ப்பம் பெற்றோர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த முயற்சியை மேற்கொண்ட நண்பர் ஜலீல், மற்றும் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்களும் துவாவும்
அன்புடன்
N.K.M.அப்துல்வாஹித் அண்ணாவியார்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!