தமிழகத்தின் அனைத்து பகுதிகள், மற்றும் வீடுகளுக்கு சூரிய
சக்தி மூலம் மின்சாரம் பொருத்தப் பட
வேண்டும் என இந்திய
தேசிய முஸ்லிம் லீக்
கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சூரிய சக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வீடுகளில் அமைக்க ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முதல்வருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம். வீடுகள் தோறும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தியதைப் போல் வீடுகள் தோறும் சூரிய மின்சக்தி (சோலார் பவர்) பெறும் திட்டத்தை அமைக்க வேண்டும் என்ற விதியை தமிழக முதல்வர் கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

1 comments:
நல்ல கோரிக்கைதான் இருந்தாளும் 2015குல் வந்துவிடுமா என்பது மக்களின் கேள்வி.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!