
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி, சமையல் காஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற அரசின் முடிவுகளுக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அரியானா மாநிலம் சூரஜ்குந்தில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்தனர். குறிப்பாக ஆண்டுக்கு 6 சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலைக்கு தரப்படும் என்ற அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதால், அடுத்த தேர்தலில் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று பல தலைவர்கள் கூறினர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆண்டுக்கு 9 காஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் விற்கப்பட்டாலும் அது போதாது என்று அவர்கள் கூறினர். இதனால், ஆண்டுக்கு 12 சமையல் காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் தர வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கோரினர்.
பின்னர் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில்,''ஆண்டுக்கு 12 சமையல் காஸ் சிலிண்டர்களை மானிய விலைக்கு தருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்'' என்றார். இதை தொடர்ந்து மாதந்தோறும் ஒரு காஸ் சிலிண்டரை மானிய விலைக்கு தருவது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இதற்காக அரசியல், கொள்கை, ஒழுக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரசை பற்றி எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. அந்த பொய் பிரசாரத்தை நாம் முறியடிக்க வேண்டும்.
ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையே அவ்வப்போது கருத்து பரிமாற்றம் நடக்க வேண்டியது அவசியம். கட்சிக்காரர்களின் கருத்துக்களை அமைச்சர்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களது குறைகளை போக்க வேண்டும். மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் மத்திய அமைச்சர்கள் கட்சிக்காரர்களை சந்தித்து பேசுவது அவசியம். குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு செல்லும்போது, காங்கிரசாரை அமைச்சர்கள் கட்டாயம் சந்திக்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!