வீட்டு உபயோகத்திற்காக அளிக்கப்பட்டு கேஸ் சிலிண்டர்களை மோசடி முறையில் பெறுவது, அதிக விலைக்கு வெளி சந்தையில் விற்பது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் வீட்டு உபயோகத்திற்கு அளிக்கப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கான பதிவை முறைப்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதற்காக நுகர்வோர் தங்களின் பெயர், முகவரி மற்றும் மற்ற விபரங்களை, கேஸ் ஏஜென்ஸிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு இன்று வரை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நுகர்வோர் தரப்பில் பலரும் விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை. இதனால் இதற்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி நாளாக அடுத்த மாதம் 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டிற்கு ஒரு கேஸ் இணைப்பு என்ற திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கூடுதல் கேஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களாகவே, அதை திரும்ப சமர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒரே வீட்டு முகவரியில் உள்ளவர்களின் பெயர்களில் பல கேஸ் இணைப்புகள் இருந்தால், அந்த இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே முகவரியில் வசிக்கும் பல குடும்பங்கள் இருக்கும் நிலையில், அதற்காக சான்றுகளை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
கேஸ் ஏஜென்ஸிகளில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் இணைப்பு பெற்றவரின் பெயர் முகவரி, குடும்ப நபர்களின் பெயர்கள், பிறந்த தேதி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் பெயர்கள், பின்கோடு ஆகிய விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும். மேலும் இணைப்பு பெற்றவரின் புகைப்படம், அடையாள அட்டை, வங்கி கணக்கு விபரம் ஆகியவையும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
குடும்ப நபர்களின் இறப்பை அடுத்து கேஸ் இணைப்பை மாற்ற வேண்டியிருந்தால், இறந்தவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் அவரது தலைமுறையினரின் தகவல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள கேஸ் நுகர்வோருக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி புதிய திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு வழங்கப்படும்.

3 comments:
அவசியம் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல பதிவு. தெரியப்படுத்தியமைக்கு நன்றி.இன்றைய காலகட்டத்தில் அரசு விசயங்களில் அலட்ச்சியம் காட்டாமல் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் பிறகு மன உளைச்சல் இருக்காது.
பயனுள்ள தகவல் !
தம்பி ஹபீப் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்
அவசியம் தெரிந்து கொள்ளக்கூடிய பயனுள்ள தகவல் !தம்பி ஹபீப் வாழ்த்துகள் !!!!!!!!
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!