நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மானிய
விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வழங்கி வந்தது.
கடும் நிதி சுமை காரணமாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
கடும் நிதி சுமை காரணமாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து ஆண்டு ஒன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு மானிய விலையில் 6 சமையல்
கியாஸ் சிலிண்டர்களே வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம்
அறிவித்தது.
ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு 6 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள்
மானியம் இல்லாத விலையில் எத்தனை சிலிண்டர்களுக்கு மேல் வேண்டுமானாலும் வாங்கிக்
கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 1-ந்தேதி
மானியம் இல்லாத சிலிண்டர் விலையை ரூ. 127 உயர்த்தியது. இதன் காரணமாக மானியம் இல்லாத
கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 890 முதல் ரூ. 910 வரை உயர்ந்து விட்டது.
வழக்கமாக வாங்கி வரும் சிலிண்டரின் விலையை விட இது இரட்டிப்பு விலை
உயர்வாகும். இது நாடெங்கும் உள்ள மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எல்லா
மாநில முதல்- மந்திரிகளும் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள்
எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மானிய
விலையில் 9 சிலிண்டர்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி அல்லாத
மற்ற மாநில அரசுகள் அதை அமல்படுத்தவில்லை.
இதனால் சிலிண்டர் வினியோகம் மற்றும் விலையில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து
வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெட்ரோலிய துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற வீரப்ப
மொய்லி, சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விவகாரத்தில் மக்களிடம் ஏற்பட்டுள்ள
கோபத்தையும், அதிருப்தியையும் போக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
எண்ணை நிறுவனங்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து மானிய விலையில்
வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை 6-ல் இருந்து 9 ஆக உயர்த்த
மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று
மாநில முதல்-மந்திரிகள் மட்டுமின்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வற்புறுத்தி
வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 6-ல் இருந்து 12
ஆக உயர்த்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு வைத்துள்ள ஆய்வு
புள்ளி விவரப்படி ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 9 சிலிண்டர்கள்
அவசியம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிலிண்டர் தேவை மற்றும் வினியோகம் தொடர்பான முழு விவரங்களை ஆய்வு
செய்யும்படி எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோலிய துறை மந்திரி வீரப்பமொய்லி உத்தரவிட்
டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவர் எண்ணை நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை
நடத்த உள்ளார். அப்போது நுகர்வோர்களுக்கு உள்ள பிரச்சினைகள், எண்ணை நிறுவனங்களுக்கு
உள்ள பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும்.
அதன் அடிப்படையில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை பற்றி தீர்மானிக்கப்படும்.
அதன் அடிப்படையில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை பற்றி தீர்மானிக்கப்படும்.
எண்ணை நிறுவனங்களை சமரசம் செய்த பிறகு சிலிண்டர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது
பற்றி பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி மந்திரி ப.சிதம்பரத்துடன் வீரப்பமொய்லி
பேச்சு நடத்துவார். அப்போது மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்துவது
தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும். இதன் மூலம் மானிய விலை சிலிண்டர்கள்
எண்ணிக்கை 6-ல் இருந்து 9 ஆக உயர்வது உறுதியாகிவிட்டது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த வாரம் இறுதி முடிவு எடுத்தாலும்
உடனடியாக அதுபற்றி அறிவிக்க இயலாது. ஏனெனில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில்
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போது சிலிண்டர் சலுகையை மத்திய அரசு
அறிவித்தால் அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக விடும்.
குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அடுத்த மாதம்
(டிசம்பர்) 17-ந்தேதி முடிகிறது. எனவே அன்றிரவு அல்லது அதற்கு அடுத்த நாள் மானிய
விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை உயர்வு தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக
வெளியாகும்.
அது உடனடியாக அமலுக்கு வரும். இதனால் சிலிண்டருக்கு ரூ. 900 வரை கொடுக்க
வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருந்த நடுத்தர, ஏழை மக்கள் சற்று ஆறுதல் அடைய
வழிவகை ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!