சென்னை அருகே தரை தட்டிய கப்பலை சிறை வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு




சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 4 ஊழியர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவர்கள் அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கப்பலை சிறை வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பிரதீபா காவிரி என்ற சரக்கு கப்பல், புயல் காரணமாக பட்டினப்பாக்கம் அருகே கரை தட்டி நின்றது. அப்போது, கப்பலில் இருந்தவர்களில் 22 பேர் உயிர்காப்பு படகு மூலம் கடலில் குதித்தனர்.
இவர்களில் 17 பேரை மீனவர்கள் மீட்க, எஞ்சியவர்கள் நிலை தெரியாமல் இருந்தது. மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் ஹெலிகாப்டர் உதவியுடன், பிரதிபா காவிரி கப்பலில் இருந்த மேலும் 15 பணியாளர்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வந்த நிலையில், மெரினா கடற்கரை, நேப்பியர் பாலம் மற்றும் துறைமுகத்திற்கு அருகே 4 பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை மீட்கப்பட்டுள்ள 4 பேரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. பலியான ஒருவர், அரக்கோணத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பதும், அவர் தரைதட்டிய கப்பலில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
மற்ற இருவரில் ஒருவரது பெயர் ராஜ் என்பதும், மற்றொருவர் ருஷப் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இன்னும் மீட்கப்படாத ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, புயல் காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் தரை தட்டி நிற்கும் கப்பலை சிறை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் தவிர மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
தரை தட்டிய சரக்கு கப்பலை மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்வதற்காக மற்றொரு கப்பல் மும்பையில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2 comments:

Ebrahim Ansari said...

இந்தக் கப்பல் தரை தட்டியத்தில் இருந்து மீட்புப் பணிக்காக அனைத்து அரசு இயந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டன. கப்பல்துறை அமைச்சர் திரு. ஜி. கே. வாசன் கடற்கரைக்கே வந்து நிவாரணப் பணியைப் பார்வை இட்டார். பரவா இல்லையே ! இவ்வளவு துரிதமாக மீட்புப் பணி நடைபெறுகிறதே என்று ஆறுதலாக இருந்தது. பிறகுதான் தெரிந்தது இந்தக் கப்பல் மத்திய அமைச்சர் சரத் பவாருக்கு சொந்தமானது என்று.

இறந்து போகும் நிலைக்கு ஆளானவர்களுக்கு நமது அனுதாபங்கள்.

ஹபீப் HB said...

தகவலுக்கு நன்றி.கப்பலை சிறை வைத்து என்ன செய்யபோகுது உயர்நீதிமன்றம் என்னதான் நடக்கும் என்று பொருத்திருந்து பாப்போம்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!