அதிராம்பட்டினத்திலிருந்து மல்லிப்பட்டினம் நோக்கிச் செல்லும் கிழக்கு
கடற்கரைச் சாலையில். ஏரிப்புறக்கரை பேருந்து நிறுத்தம் அருகே
திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அதிரை மற்றும்
சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் நாளை (11-11-2012) ஞாயிறு காலை 10:00 மணியளவில்
ECR சாலையில் மறியல் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள். மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகள் இருக்கும் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையினால் பலசமூக சீரழிவுகளும். போக்குவரத்து வாகன விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஊர்நலன் மற்றும் சமூக சீரழிவுக்கு எதிரான அனைவரும் இந்த அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் அரசுக்கு தெரிவிக்க திரலாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிரார்கள்.
இப்படிக்கு.
மதுஒழிப்பு இயக்கம்
அதிராம்பட்டினம்
கல்வி நிலையங்கள். மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகள் இருக்கும் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையினால் பலசமூக சீரழிவுகளும். போக்குவரத்து வாகன விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஊர்நலன் மற்றும் சமூக சீரழிவுக்கு எதிரான அனைவரும் இந்த அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் அரசுக்கு தெரிவிக்க திரலாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிரார்கள்.
இப்படிக்கு.
மதுஒழிப்பு இயக்கம்
அதிராம்பட்டினம்

3 comments:
அவசியமான போராட்டம் தான்.நம்மை பாதிக்கும் எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு இருந்தால் தான் அரசு கவனத்திற்கு போகும்.அதற்க்கான தீர்வு கிடைக்கும். ஆனால் அமைதியான முறையில் கோஷமிட்டு நம் எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும். அனாவிசயமான வார்த்தைகளை வெளிப்படுத்தி வீண் கலவரம் வராமல் நடந்து கொள்வது நல்லது.
இந்த போராட்டம் அவசியம் தேவை இதில் யாரும் கட்சிகள் பார்க்க வேண்டாம் அதிரை வாசிகள் அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.மது மாது சூது இவை அனைத்தும் நம் நாட்டுக்கு கேடு.
ஐந்து கிராமங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துவதாக அறிவித்து இருக்கின்றன. ஒருநாள் சாலை மறியலால் ஒன்றும் பெரிதாக விளைவுகள் வந்துவிடாது. இருந்தாலும் வரவேற்கலாம். ஆனால் இந்த கிராமங்கள் குறைந்த பட்சம் தாங்கள் கிராமக் கட்டுப்பாடாக குடிக்ககூடாது - குடித்தவர்கள் கிராமங்களில் நுழையக் கூடாது என்று என் ஊர்க் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது?
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!