ஏப்ரல்
27: அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்த்தவர் என் எஸ் இளங்கோவன் இவருடைய
மகன் சிட்டி பாபு. அதிராம்பட்டினம் to முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையை
ஒட்டிய பகுதியில் இவருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த பகுதியில் பல
குடும்பங்கள் வீடு கட்டி குடியமர்ந்து வருகின்றனர். இந்த பகுதியில்
வசிக்கும் குடும்பங்கள் பயன்பெறும் நோக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு
முன்பு 960 அடியில் புதிதாக போர்வேல் அமைக்கும் பணியை ஆரம்பித்தார்.
போர்வெல் பணிகள் அனைத்தும் நிறைவுற்றபிறகு இன்ப அதிர்ச்சியாக எவ்வித மின்
இணைப்பு இல்லாமலும், நீர்முழ்கி மோட்டார் பொருத்தாமலும், புதைக்கபட்ட
குழாயிலிருந்து தானாகவே தண்ணீர் நீருற்றுபோல் பொங்கிவழிகிறது. கடந்த ஒரு
வார காலமாக வெளியாகிக்கொண்டிருக்கும் இந்த அதிசய நீருற்றால் அந்தபகுதி
பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
தகவலறிந்த அதிராம்பட்டினம் மற்றும் அதை
சுற்றி வசிக்கக்கூடிய கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு தினமும் வந்து
ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் அப்பகுதியினர் வழிந்து
ஓடும் தண்ணீரை அன்றாட தேவைகளுக்கும், குளங்களில் தேக்கி வைத்தும்
பயன்படுத்தி வருகின்றனர். கடும் வெப்பத்தால் தற்போது வறண்டு காணப்படும்
அதிராம்பட்டினத்தில் இந்த தண்ணீர் வரப்பிரசாதாமாக அமைந்துவிட்டது.
இந்த நீருற்று குறித்து குடிநீர் தொடர்புடைய அலுவலகர் நம்மிடம் கூறுகையில்…
பூமிக்கடியில் ஒவ்வொரு நிலைகளில் ஏற்படும் வெப்ப அழுத்தம் காரணமாக இதுபோன்ற நீருற்று ஏற்படுகிறது. தானாக பொங்கிவழியும் நீருற்றை முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன்பிறகே பயன்படுத்த வேண்டும் என்றார்.
இந்த நீருற்று குறித்து குடிநீர் தொடர்புடைய அலுவலகர் நம்மிடம் கூறுகையில்…
பூமிக்கடியில் ஒவ்வொரு நிலைகளில் ஏற்படும் வெப்ப அழுத்தம் காரணமாக இதுபோன்ற நீருற்று ஏற்படுகிறது. தானாக பொங்கிவழியும் நீருற்றை முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன்பிறகே பயன்படுத்த வேண்டும் என்றார்.



தகவல்: அதிரைநியூஸ்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!