திருச்சி விமான நிலையத்தில், ஏப்ரல் 1
ஆம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே, வாகன நிறுத்தக் கட்டணங்களை வசூலிக்கும்
என நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும்
கூறியது : திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், வாகன நிறுத்த கட்டணத்தை
தனியார் நிறுவனம் வசூலித்து வந்தது. தற்போது விமான நிலைய ஆணையமே வாகன
நிறுத்தத்தை நிர்வகிக்க உள்ளது.
கட்டண விவரம்:
விமானநிலையத்துக்குள் சொந்த, வாடகை
வாகனத்தில் வந்து, 3 நிமிஷங்களுக்குள் பயணிகளை இறக்கிவிட்டு
ஏற்றிச்(பிக்-அப்) செல்ல கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆனால், வாடகை வாகனங்களில் வந்து பயணிகளை
ஏற்றிச் செல்ல வேண்டுமெனில், விமான நிலையத்துக்குள் நுழைவுக் கட்டணமாக
ரூ.40 செலுத்த வேண்டும்.
விமானநிலையத்தில் வாகனங்களை நிறுத்த 30 நிமிடங்கள் வரை:
பேருந்து, டிரக், வேன் - ரூ.30,
கார் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் - ரூ.20,
இருசக்கர வாகனம் - ரூ.10
30 நிமிடத்திலிருந்து 2 மணி நேரம் வரை நிறுத்த
பேருந்து, டிரக், வேன் - ரூ.70,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.60,
கார் - ரூ.55,
இருசக்கர வாகனம் - ரூ.15
2 மணி நேரத்துக்கு மேல், 7 மணி நேரம் வரை
நான்கு சக்கர வாகனங்களுக்கு தலா ஒரு மணி நேரத்துக்கு ரூ.10,
இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படும்.
7 மணி நேரம் முதல் 2 நாள்கள் வரை...:
விமான நிலைய வளாகத்தில் 7 மணி நேரத்துக்கு மேல் 24 மணி நேரம் வரை நிறுத்த
பேருந்து, டிரக், வேன் - ரூ.210,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.180,
கார் - ரூ.165,
இருசக்கர வாகனம் - ரூ.45
24 மணி நேரத்துக்கு மேல் 36 மணி நேரம் வரை
பேருந்து, டிரக், வேன் - ரூ.315,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.270,
கார் - ரூ.247.50,
இருசக்கர வாகனம் - ரூ.67.50
48 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு
பேருந்து, டிரக், வேன் - ரூ.420,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.360,
கார் - ரூ.330,
இருசக்கர வாகனம் - ரூ.90
பாதுகாப்புக் காரணங்கள் கருதி 48 மணி நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்க அனுமதியில்லை.
பயணத்தின்போது 2 நாள்களுக்குள் வர முடியாமல் இருந்தால், அதுகுறித்து
வாகனத்தின் ஆர்.சி புத்தக நகலுடன் விமானநிலைய அதிகாரிகளுக்கு வேண்டுகோள்
கடிதம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களின்
உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வழியில் நிறுத்தினால் அபராதம் : வாகனங்களை அவற்றுக்குரிய தளத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
வேறு பகுதிகளில் நிறுத்தினால் அபராதம்:
பேருந்து, டிரக், வேன் - ரூ.280,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.240,
கார் - ரூ.220,
இருசக்கர வாகனம் - ரூ.60 அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த நடைமுறை 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
3 நிமிடம் போதாது: விமான நிலையத்துக்குள் பயணிகளை ஏற்றிஅல்லது இறக்கிவிட
வரும் வாகனங்களுக்கு 3 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த
குறிப்பிட்ட நேரத்துக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியே வருவது என்பது
இயலாத காரியம். எனவே, பழையபடியே கால அவகாசத்தை 5 நிமிடங்களாக்க வேண்டும்
என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Emperor Casino | Shootercasino
ReplyDeleteEnjoy casino slots and casino games with 제왕카지노 the best 카지노 payouts at a หาเงินออนไลน์ top rated casino. With over 1,000 free spins games available. Slots, Blackjack, Roulette,