சமையல் காஸ் பதிவுக்கு புதிய வசதி

தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன (எச்பிசிஎல்) சமையல் காஸ் வாடிக்கையாளர்கள், 24 மணி நேரமும் சிலிண்டர் முன் பதிவு செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
வாடிக்கையாளர்கள் 90922 23456 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்களது விநியோகஸ்தரின் தொலைபேசி எண், வாடிக்கையாளர் எண் ஆகியவற்றைத் தெரிவித்தால் சமையல் காஸ் சிலிண்டருக்கு தானாக முன்பதிவு செய்து கொள்ளப்படும். 24 மணி நேரமும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வசதியை எச்பிசிஎல் நிறுவன முதுநிலை மண்டல மேலாளர் ஜி.வினோத்குமார் தொடங்கி வைத்தார்.செல்போன் மூலமாகத் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது பதிவு உறுதி செய்யப்பட்டது குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர், சமையல் காஸ் வழங்குவதற்கான ரசீது தயார் செய்தவுடன் ரசீது எண், எந்த தேதியில் காஸ் வீட்டுக்குக் கிடைக்கும் என்பதன் விவரம் எஸ்எம்எஸ் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படும். சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டதும், அதற்கான தகவலும் வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ்-ல் தெரிவிக்கப்படும்.
இரண்டாவது முறை சிலிண்டர் முன் பதிவுக்கு தொடர்பு கொண்டால், தானியங்கி தொலைபேசி சேவை வாடிக்கையாளர் எண், விநியோகஸ்தர் பெயரைத் தெரிவிக்கும். தொடர்பு கொள்பவர்கள் உறுதி அளிப்பதற்கான எண்ணை அழுத்தினால், தானாகவே பதிவு செய்து கொள்ளப்படும்.வாடிக்கையாளர்கள், 90922 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். எச்பி (இடைவெளி) எஸ்டிடி குறியீடு இல்லாமல் விநியோகஸ்தர் தொலைபேசி எண் (இடைவெளி) வாடிக்கையாளர் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மேற்குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மறுமுறை எஸ்எம்எஸ்-ல் பதிவு செய்து ஏட எஅந என டைப் செய்து அதே எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதுமானது."சமையல் காஸ் விநியோகஸ்தர்களின் வேலை நேரத்துக்குள் தொடர்பு கொள்ள முடியாதது, விடுமுறை நாள்களில் பதிவு செய்ய முடியாதது போன்ற இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக இத்தகைய முன்பதிவு வசதியை எச்பிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்த தானியங்கி தொலைபேசி சேவை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருக்கும்' என்று எச்பிசிஎல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!