நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம்!

Naroda Patia case-Former Gujarat minister and Babu bajrangi, 31 others convicted
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரோடா பாட்டியாவில் நடத்திய கோரத்தாண்டவமான கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாதா மாபெரும் இனப் படுகொலையில் ஈடுபட்டனர். ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த மறுநாள் அதாவது 2002 பிப்ரவரி 29-ஆம்தேதி குஜராத் மாநிலத்தின் நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் கூட்டுப் படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.
28ம் தேதி பந்த் நடத்த விஸ்வ இந்து பரிஷத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அன்றைய தினம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நரோடா பாடியா என்ற இடத்தில் பெரும் திரளான விஎச்பி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூடினர். அவர்கள் பயங்கர வன்முறை வெறியாட்டத்தில் குதித்தனர். கண்ணில் பட்ட முஸ்லீம்களையெல்லாம் வேட்டையாடினர். இதில் 97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் 33 பேர் படுகாயமடைந்தனர்.
இதுத்தொடர்பான வழக்கு அஹ்மதாபாத்தில் அமைக்கப்பட்டசிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை விசாரித்த கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் அவ்வழக்கின் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி அமைப்பைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.
மாயா கோட்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர். மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேதான் ஆவார். முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

1 comments:

Unknown said...

கசாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக.

குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாயா கோட்னானி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். 97 பேரை திட்டமிட்டு கொன்றதாக தெகல்காவில் பகிரங்கமாக பாபு பஜரங்கி போன்றவர்கள் ஒத்துக்கொண்ட பிறகும் கைதான 62 பேரில் 32 பேரை மட்டும்தான் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளார் நீதிபதி. ஆனால் சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையானதை விசாரித்த மத்திய அரசின் பானர்ஜி கமிசன் நடந்தது விபத்து எனச் சொன்னதும், அதன் அறிக்கையை 2005-இல் சட்டவிரோதமானது என்றது குஜராத் உயர்நீதி மன்றம். 58 பேர் இறந்த சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையான வழக்கில் நிரபராதிகளான 11 முசுலீம்களுக்கு தூக்குத்தண்டனையும், 20 பேருக்கு ஆயுள்தண்டனையும் கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

குஜராத் இனப்படுகொலை கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா-நானாவதிக் கமிசனின் ஆட்கள் தங்களவர்கள் என முன்னாள் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியா தெகல்காவிடம் போட்டுடைத்த பிறகும் அந்த கமிசன் ஷா இறந்தபிறகும் மற்றொரு நீதிபதியோடு தொடருகிறது. மோடி வந்த பிறகு போலீசார், நீதிபதி என அனைத்து அதிகார வர்க்கமும் காவிமயமானது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் இவர்கள் கூட்டணி அம்பலமானது அனைவருக்கும் தெரிந்ததே. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிகாரியாக மாநில அரசு நியமித்த நோயல் பார்மர் முசுலீம்கள் அனைவருமே அடிப்படைவாதிகள் என முதலிலேயே வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு பின் அவரது நண்பரான ரமேஷ் படேல் எனும் அதிகாரியை நியமித்துள்ளது மோடியின் அரசு.

சபர்மதி வண்டி விபத்துக்குள்ளான 27 பிப்ரவரி 2002 அன்று நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலவரம் செய்யும் இந்துக்களை கண்டுகொள்ள வேண்டாம் என உத்தரவிடுகிறார் மோடி. இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிகாரியான சஞ்சீவ் பட் வெளிப்படையாக பேசத் துவங்கியவுடன் மோடியின் போலீசு அவர்மீது பாயத் துவங்கியது. இந்துமதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இசான் ஷாப்ரியின் மனைவி ஜாகியா ஷாப்ரி இதனை சுட்டிக்காட்டியவுடன், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளை வைத்து பொய் சாட்சியம் சொல்ல வைத்தும், ஞாபகமில்லை என சொல்ல வைத்தும் சஞ்சீவ் பட்டையே வில்லனாக்கினர் மோடியின் புலனாய்வுக்குழுவினர். 3 வழக்குகளையும் அவர் மீது பதிவு செய்தனர்.

97 பேரைக் கொன்ற நரோடா பாட்டியா வழக்கில் குற்றவாளிகள் பலரும் ஆம், நாங்கள் அப்படித்தான் கொன்றோம் என்பதை தெகல்விடம் பெருமையோடு ஒப்புக் கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் எதுவும் 20 ஆண்டுகளுக்கு மேல் போகாது. ஆனால் சபர்மதி வண்டி விபத்துக்கான பகுதியில் வசித்தவர்கள் முசுலீம்களாக இருந்த காரணத்துக்காக தூக்குத் தண்டனையும், மரண தண்டனையும்.

2000 க்கும் மேற்பட்டோரை கொன்ற கொலைகாரன் மோடிக்கு பிரதமர் பந்தயக் குதிரை பதவி. இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும். கசாப்பை தூக்கிலடக் கோருவோருக்கு பாபு பஜ்ரங்கியும், மோடியும் தூக்கிலிடப்பட வேண்டியவர்களாக படாமல் போன காரணத்தை அவர்கள் ஆராய வேண்டும். பாபர் மசூதியை இடித்து கலவரம் நடத்திய அத்வானியும், மும்பை கலவரத்தை நடத்திய பால் தாக்கரேவும் கொல்லப்பட்டவர்களுக்கு பொறுப்பேற்று என்ன தண்டனை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.==THANKS VINAVU.COM

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!