அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவைச் சார்ந்த சகோதரர் இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’ அவர்கள் நமது இந்திய நாட்டின் மீதுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தனது விடா முயற்சியின் கீழ் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் உருவாக்கி நமது சமூகத்திற்கு வழங்கி பெருமை சேர்த்து வருகின்றார். பொதுமக்கள் மற்றும் ஏராளமான மாணாக்கர்கள் வியப்புடன் இவரின் அசத்தும் கண்டுபிடிப்புகளை கண்டு மகிழ்வது அவருக்கும் மேலும் உற்சாகத்தை தருகின்றது. இதற்கு அங்கிகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவற்றை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன.
மேலும் தனது நாட்டை நேசிக்கும் இவரின் மிகுந்த பற்றுதல் காரணமாக “தேசபற்று மிக்கவர்” என்ற விருதும் பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. நமதூருக்கு பெருமைத் தேடித்தந்துகொண்டிருக்கும் சகோ. இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’ அவர்களுக்கு நாமும் நம்முடைய வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டோம்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!