மதுரை தத்தனேரி பகுதியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி எதிரே காமாட்சி நகர் உள்ளது. இங்குள்ள 2-வது தெருவில் தவசி என்ற டிராவல்ஸ் அதிபர் 4 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டி வருகிறார். தற்போது 3 மாடிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 4 மாடி கட்ட சென்ட்ரிங் போடும் பணி நடந்து வருகிறது.
கட்டிட பணியில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடு பட்டு வருகிறார்கள். இன்று விடுமுறை என்பதால் காலையில் 7 தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு வந்திருந்தனர். அம்பலத்தடியை சேர்ந்த வேல்முருகன், சண்முகம், கோவிந்தபாணி, அழகன், கிருஷ்ணன், ஆறுமுகம் மற்றொரு ஆறுமுகம் ஆகிய 7 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென 3 மாடி கட்டிடம் மளமள வென இடிந்து விழ தொடங்கியது. வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பீதியில் அலறியடித்து அங்கும், இங்கும் ஓடினர்.
பக்கத்து மாடியில் ஏறி 5 பேர் உயிர் தப்பினர். மீதி 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இடிபாடுக்குள் சிக்கி ஆறுமுகம் பலியானார். அவரது உடல் காலை 10 மணி அளவில் மீட்கப்பட்டது. இடிபாடுக்குள் சிக்கி கொண்ட கிருஷ்ணன் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!