செவ்வாயன்று, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 124 பந்துகளில் 150 ஓட்டங்களை(16 நான்கடிகள்) ஆம்லா எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அவரது அதிகபட்ச ஓட்டமாகும். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டமும் இதுதான். மேலும் இதன்மூலம் கிரிக்கெட்டின் மூன்று வகை ஆட்டங்களிலும் தென் ஆஃப்ரிக்க அணி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
தென் ஆஃப்ரிக்க அணி ஒருநாள் தரவரிசையிலும் 124 புள்ளிகள் பெற்று முதலிடத்தை எட்டியுள்ளது.
இதற்கு முன்னரே இங்கிலாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரிலும் 120 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. டி20 போட்டியிலும் ஏற்கனவே 130 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஒருநாள் ஆட்டங்களில் விரைவாக ஓட்டங்கள் குவித்த வரிசையில், இந்தியாவின் வீராட்கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் தற்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், மேற்கிந்தியத் தீவுகளின் கார்டன் கிரினிட்ஜ் ஆகியோர் 72 ஆட்டங்களில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்து 3-வது இடத்தில் உள்ளன.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!