Sep 2012
லண்டன்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரானை தாக்க தயாராகிவரும் இஸ்ரேலுக்குஅமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதியான மார்டின் டெம்ப்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரானை தாக்கினால் அமெரிக்கா உதவும் என கருதவேண்டாம். தாக்குதல் திட்டத்துடன் செயல்பட்டால் பிரச்சனையை சிக்கலாக்க அமெரிக்கா விரும்பாது என்று மார்டின் டெம்ப்ஸ் கூறியுள்ளார்
.
லண்டனில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ்போட்டிகளில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்த அமெரிக்கா அணியுடன் மார்டின் டெம்ப்ஸ் வருகை தந்தார். ஈரானுக்கு அணுஆயுதம் தயாரிக்கும் திட்டமிருந்தால் அதனை தாக்குதல் மூலம் தாமதப்படுத்த முடியுமே தவிர நிறுத்தவியலாது என்று டெம்ஸ்ப்ஸ் கூறினார்.
முதன் முறையாக அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் ஈரான் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பது குறித்து எதுவும் தெரியாது என்றும், இதுத் தொடர்பான தகவல்கள் உளவுத்துறைக்கு கிடைக்கவில்லை எனவும் உயர் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணுசக்தி திட்டங்களின் பெயரால் இஸ்ரேல், ஈரானை தாக்க முயலாது என்று முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா கருத்து தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!