2 Sep 2012
போபால்:மத்தியபிரதேச மாநிலம் ஷாஹ்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான நேசனல் ஸ்டுடண்ட்ஸ் யூனியன்(என்.எஸ்.யு) உறுப்பினரான மாணவர் ஒருவரை ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தளத்தைச் சார்ந்தவர்கள் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த 20 வயதான மாணவர் ரோஹித் ஜோஷி மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் 35 சதவீத பகுதிகளும் தீயில் கருகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
.
ஷாஹ்பூர் அரசு கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லை என்று சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட்டிடம் ரோஹித் இரண்டு தினங்கள் முன்பு புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித்திற்கும், பஜ்ரங்தளத்தின் வெறிப்பிடித்த ஹிந்துத்துவாவினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
நேற்று முன் தினம் பஜ்ரங்தளத்தைச் சார்ந்த தீவிரவாதிகளான ஷியாம் சுக்லா, விஜய் சவுதரி, அவிநாஷ் சிங் யாதவ், வினோத் மோரே ஆகியோர் ரோஹித் ஜோஷியின் வீட்டிற்கு சென்று இப்பிரச்சனைக் குறித்து பேசித் தீர்ப்போம் என பொய்யாக கூறி வெளியே அழைத்துச் சென்றனர். இதனை நம்பி அவர்களுடன் சென்ற ரோஹித்தை, பஜ்ரங்தளத்தைச் சார்ந்த ஹிந்துத்துவா வெறியர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர். இச்சம்பவத்தில் போலீசார் நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவுச்செய்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஹித் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!