சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!


China earthquake toll rises to 80
பீஜிங்:தென்மேற்கு சீனாவில் யுனான், க்யுஷ்ஹு மாகாணங்களில் ஏற்பட்ட பயங்கர  நிலநடுக்கத்தில் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 80 ஐ தாண்டியுள்ளது. இடிபாடுக‌ளி‌ல் பல‌ர் ‌சி‌க்‌கியு‌ள்ளதா‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன அ‌‌ஞ்ச‌ப்படு‌கிறது. மீட்பு பணிகள் தொடர்கின்றன. 730க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நில நடுக்கம் மலையோர பகுதிகளை அதிகமாக பாதித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6 பதிவானதாக அமெரிக்க ஜியோலஜிக்கல் சர்வே துறை கூறுகிறது.

யுனான் மாகாணத்தில் உள்ள யில்லாங் பகுதியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  நிலநடுக்கத்தினால் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 40 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
மலைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பாறைகள் விழுந்துள்ளதால், மீட்புக் குழுவினர் மலைமீது ஏறி செல்ல தாமதமாவதால் மீட்பு வேலைகள் மெதுவாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களை மீட்புக் குழுவினர் அடைந்தால்தான் உயிரிழப்பு குறித்த முழுவிவரம் தெரிய வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. யுனான் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4,300 கால்நடைகள் உயிரிழந்தன. 150-ஹெக்டருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந் நாட்டுப் பிரதமர் வென் ஜியாபோ சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்டமக்களுக்கு உணவு, குடிநீர், உடை போன்ற அத்தியாவசியப் பொருள்களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!