ஜித்தா: தஃபாரெஜ்-ஜித்தா(TAFAREG-Jeddah) அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சிஜித்தாவில் நடந்தது.
அது சமயம் ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.
அடிக்கடி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்து வரும் தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பினர் இந்த முறை தங்களது பதினொன்றாவது குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி சென்ற வியாழன் இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் குடும்பத்தினர், குழந்தைகள் சகிதமாய் கலந்துக்கொண்டனர். மாலை 7 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள், மறுநாள் வெள்ளி அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், மாத்தி யோசி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு என்று பிரத்யேகமாக ஸ்கிப்பிங், அறிவுத்திறன், ஓட்டப்பந்தயம், போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அதுபோல் ஆண்களுக்காக அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், வாலிபால், கயிர் இழுத்தல், டங் ட்விஸ்டர் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இடையில் மௌலவி. நூஹ் அல்தாபியின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் நடந்த போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு ஏராளமான பரிசுகள் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
முன்னதாக, வந்திருந்த அனைவர்களுக்கும் மாலை சிற்றுண்டியாக தேநீர், காபி, ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டன. இரவு மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!