முக்கியக்குறிப்புகள்:
* எஸ்.எஸ்.எல்.சிமுடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயதுவரை, பிற்படுத்தப்பட்ட மற்றும்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டிவகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயதுவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம்.
* எஸ்.எஸ்.எல்.சிமுடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயதுவரை, பிற்படுத்தப்பட்ட மற்றும்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டிவகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயதுவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம்.
முடியும்.
* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்...பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்குதுப்புரவு பணி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைபதிவைப் புதுப்பிக்க வேண்டும்.அதன்படி ஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.அடுத்த 18 மாதங்கள் வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும்தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.
* ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்குமாற நினைத்தால்... அவர் சென்னைக்கு குடிபெயர்ந்ததற்குஅத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்துபெற்ற குடும்ப குடிபெயர்ச்சிசான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடம்உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குமாற்றிக் கொடுப்பார்கள். இப்படிஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான்மாற்றமுடியும்.
* புதிதாகபதிவு செய்பவர்கள், புதுப்பிக்கநினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளை இணைக்க நினைப்பவர்கள்என அனைவருமே வேலைவாய்ப்புஅலுவலகத்தின் www.tnvelaivaaippu.gov.in என்றஇணையதள முகவரி மூலமாகவேகூட பதிவு செய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கானஅனைத்து வழிகாட்டல்களும் இதிலேயேகிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால், சான்றிதழ்சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- அவள் விகடன்
- அவள் விகடன்
----------------
என்றும்மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டைகலீல்பாகவீ
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டைகலீல்பாகவீ
1 comments:
பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!