ஜித்தா மருத்துவமனையில் மன நிலை பாதிக்கப்பட்ட தமிழர்!


ஜித்தா மருத்துவமனையில் மன நிலை பாதிக்கப்பட்ட தமிழர்

ஜித்தா: சவூதி அரேபியா, ஜித்தாவில் மன நலம் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரைப் பற்றி விபரங்கள் சரிவர தெரியாததால், உறவினர்களை தொடர்பு கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, போய்குனம் பகுதியை சேர்ந்த தணிகவேலு (33) கடந்த மூன்று வார காலமாக ஜித்தாவில் உள்ள ஜித்தா நேஷனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மன நல பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது ஞாபகசக்தி குறைப்பாட்டால் தணிகவேலு, தான் இருக்கும் இடமே (சவூதி) அவருக்கு தெரியவில்லை.  முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறி வருவதால், இவரது உறவினர்கள் பற்றி விபரம் தெரியவில்லை. சில சமயங்களில் இவர் தாயிப் நகரில் வேலைப் பார்ததாகவும் கூறி வருகிறார்.
இவரைப் பற்றி மருத்துவர் பிரான்சிஸ் கூறும் போது,
இந்தியர் ஒருவர் சரபியா பாலத்தின் கீழ் நோய்வாய்பட்டு இருப்பதகாக ஜித்தா இந்திய துணைத்தூதரகத்திற்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் இவரை எங்களது மருத்துவமனையில் மன நல சிகிச்சைக்காக சேர்த்தனர்.  நோயின் தன்மையை அறிய அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்பட்டதில், அவரது மூளையில் கட்டி வளர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த கட்டியினால் நோயாளி தனது ஞாபசக்தி குறைந்து காணப்படுவார். இவர் ஞாபகசக்தியை இழந்ததால் இவரைப் பற்றி சரியான விபரங்கள் கிடைக்கவில்லை" என்றார்.
தணிகவேலுவின் உறவினர்கள் விபரம் கிடைப்பின், சமூக நல அமைப்பான செந்தமிழ் நல மன்றம் இவரை உறவினர்களிடத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
ஜித்தா இந்திய துணைத்தூதரகம் கொடுத்த அவுட்பாசில் உள்ள இவரைப் பற்றிய விபரங்கள்:
பெயர்:                         தணிகவேலு
பிறந்த தேதி:             07/05/1979
பிறந்த இடம்:            கொட்டல்
தகப்பனார் பெயர்:   குணசேகரன்
தாயார் பெயர்:          பர்வதம்
முகவரி:                    நான்காவது வார்டு, ஜவல்குப்பம், போய்குனம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
இவரைப் பற்றி விபரம் தெரிந்தோர், ஜித்தா நேஷனல் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் செந்தமிழ் நல மன்றத்தை தொடர்புக் கொள்ளவும்.
நன்றி- இந்நேரம்.COM 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!