எந்த குரு பெயர்ச்சியும் சாம்ஸங் நிறுவனத்துக்கு சாதகமாக இல்லை. சாம்ஸங் மொபைல்கள் வெடிப்பது ‘தொன்றுதொட்டு’ நடக்கும் சம்பிரதாயமாகவே இருக்கிறது. அது தொடர்கிறது என்பதை சொல்லும் விதமாக ஒரு சம்பவம் இந்த முறை இந்தோனேஷியாவில் நடந்திருக்கிறது.
சென்ற வாரம் வைரல் ஆன ஒரு வீடியோதான் சாம்ஸங் தலையை இப்போது உருட்ட வைத்திருக்கிறது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் மொபைலை தனது பாக்கெட்டில் இருந்து எடுக்கிறார். எடுத்த அந்த நொடியில் அது வெடிக்கிறது. அவரது சட்டை தீப்பிடிக்கிறது. தரையில் படுத்து உருண்டு அந்த நெருப்பை அவர் அணைக்கிறார். அவர் பாக்கெட்டில் இருந்தது சாம்ஸங் மொபைல். 2013 ஆம் ஆண்டு வெளியான மாடல்.
ஒரே நேரத்தில் WiFi, GPS, ப்ளூடூத் ஆகிய வசதிகளை அவர் பயன்படுத்தியதால் மொபைல் சூடாகி வெடித்திருக்கலாம் என்கிறார்கள். அவர் பயன்படுத்திய மொபைலில் இருந்த பேட்டரி சாம்ஸங் பேட்டரி இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம். இது பற்றி சாம்ஸங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அவர் விரைவில் குணம்பெற எங்கள் பிரார்த்தனைகள். அவர் பயன்படுத்திய சாம்ஸங் மொபைலில் இருப்பது சாம்ஸங் ஒரிஜினல் பேட்டரி இல்லை. எங்கள் வாடிக்கையாளர் அனைவரையும் நாங்கள் சாம்ஸங் ஒரிஜினல் உதிரிபாகங்களையே பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.
சாம்ஸங் மொபைல்கள் வெடிப்பது இதற்கு முன்பும் பல முறை நடந்திருக்கிறது. சென்ற ஆண்டு வெளியான நோட் 7 ரிலீஸ் ஆன சில வாரங்களிலே பல இடங்களில் வெடித்தன. அதன்பிறகு பல மொபைல்களை சாம்ஸங் நிறுவனம் ரீப்ளேஸ் செய்தது.
2013லும் போலி பேட்டரியால் இப்படியொரு சம்பவம் நடந்தது. சாம்ஸங் கேலக்ஸி எஸ்3 மாடலைப் பயன்படுத்திய பெண் ஒருவர், மொபைல் வெடித்து பலத்தக் காயங்களுக்கு உள்ளானார்.
பேட்டரி ஏன் வெடிக்கிறது:
லித்தியம் அயன் வகை பேட்டரிகள் தான் அனைத்துவகை மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் உள்ளே இருக்கும் கேத்தோட் (Cathode) மற்றும் ஆனோட்(Anode) தான் மொபைல் சார்ஜ் ஏற முக்கியமான பாகங்கள். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடாமல் இருக்க seperator பயன்படுத்தப்படும். இவை இரண்டும் தொட்டுக்கொண்டால் பேட்டரி வெடிக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். விலைகுறைந்த பேட்டரிகள் தயாரிக்கும் முறையில் பிரச்னைகள் இருந்தால் இந்தச் சூழல் உருவாகி பேட்டரி வெடிக்கலாம்.
இது மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது. பேட்டரி எப்போது சார்ஜ் ஆக வேண்டும், எவ்வளவு ஆக வேண்டும் என்பதையெல்லாம் மொபைலின் சாஃப்ட்வேர் தான் கட்டளையிடும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தாலும் மொபைல் அதிக சார்ஜ் ஆகி வெடிக்கலாம்.
மேலும், மொபைல் அதிக சூடாகினாலும் வெடிக்கலாம். இப்போது வரும் மொபைல்களில் உலோகங்களால் தயாரிக்கப்படுவதால் அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் எளிதில் சூடாகும். ஒரே சமயத்தில் மொபைலின் பல வசதிகளை பயன்படுத்துவதால் மொபைல் சூடாகலாம். மொபைல் சூடாவதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், அப்போது உள்ளேயிருக்கும் பேட்டரி அதைத் தாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்காகத்தான், அந்தந்த மொபைல் நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பேட்டரிகளை மட்டுமே வாங்க வேண்டும்.
மொபைல் பேட்டரிகள் வாங்கும்போதும், வாங்கிய பிறகும் கவனமாக இருக்க வேண்டிய உதிரிபாகம். அதில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!