ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் மே 1 முதல் ரூ.5 ஆக உயர்வு

புதுடெல்லி: ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் மே 1 முதல் ரூ. 5 ஆக உயருகிறது. தற்போது பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 3 ஆக உள்ளது.

மக்களவையில் முன் னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரயில் டிக்கெட் மற்றும் பிளாட் பார்ம் டிக் கெட்டுகள் உயர்த்தப் பட்டன. இதற்கு திரிணமுல்காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித் தார். இதை தொடர்ந்து தினேஷ் திரிவேதி அமை ச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொட ர்ந்து ரயில்வே அமைச்சராக பதவியேற்ற முகுல்ராய், பல்வேறு ரயில் டிக்கெட் கட்டண உயர்வுகளை வாபஸ் பெற்றார்.

ஆனால் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவித்துள்ள படி அனைத்து கட்டணங்களும் கடந்த ஏப்ரல் 1ந் தேதி உயர்த்தப்பட்டன. ஆனால் பிளாட்பார்ம் டிக்கெட் மட்டும் உயர்த்தப்பட வில்லை. தற்போது வரும் மே 1 முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ரூ. 5 ஆக உயர்த்தும் படி அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 1 முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 3ல் இருந்து ரூ. 5ஆக உயருகிறது

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!