பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 118 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 110 பயணிகள் மற்றும் 17 ஊழியர்கள் உட்பட 127 பேர் பயணம் செய்த தனியார் பயணிகள் விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் செல்லும் போது விழுந்து நொறுங்கியது..மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் போஜாஏர் என்ற தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமானது.கீழே விழுந்த விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் 40 வீடுகள் தீப்பிடித்து எரிவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மீட்புப் பனி முழு வீச்சில் நிகழ்ந்து வருகிறது. காவல் துறையினருடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.100 பேர் கொண்ட ராணுவக் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. விமான பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் உடல்களைத் தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!