மே 25, துபை ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி

மே 25, துபை ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி



துபை : துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ் – IMAN ) அமைப்பு 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணி முதல் 9 மணி வரை அல் கிஸஸ் லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி – ஒளி தொகுப்பு நிகழ்ச்சியினை நடத்த இருக்கிறது.

நிகழ்ச்சியினை தஞ்சை ஜலாலுதீன் வடிவமைத்து தொகுத்து வழங்குகிறார்.

“உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா.” (அல்குர்ஆன் 51:20.21)

இந்த திருமறை வசனங்களில் கூறியுள்ள அத்தாட்சிகளை கண்ணாலும், கருத்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் ஓர் அரிய காட்சித் தொகுப்பு நிகழ்ச்சி.

இந்நிகழ்வில் குடும்பத்தினருடன் அனைவரும் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 055 800 79 09  / 050 51 96 433 / 050 658 93 05 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

E-mail : info@imandubai.com


குறிப்பு : நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கப்படும்

இடவசதியினைக் கருத்தில் கொண்டு முன்பதிவு செய்பவருக்கே முன்னுரிமை

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!