AAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிதாக உருவாக்கிய நிர்வாகக் கமிட்டி கலைக்கப்பட்டது !




AAMF’ன் அவசரக் கூட்டத்தில்
அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிதாக உருவாக்கிய நிர்வாகக் கமிட்டி கலைக்கப்பட்டது !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக, ஒவ்வொரு முஹல்லாவிலிருந்தும் தலா இருவர் வீதமும், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக இரண்டு நபர்களும், நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் ஆகக் கூடுதல் இருபத்திமூன்று நபர்களைக் கொண்ட ‘அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி’ என்ற பெயரில் நிர்வாகக்குழு ஒன்றை உருவாக்கி செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தை சார்ந்த அதன் செயலாளரால் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று அதிரை அனைத்து முஹல்லாவின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கூரியர் மூலம் கிடைக்கப்பெற்றது.





இதையடுத்து இன்று மீண்டும் AAMF’ன் சார்பாக நமதூர் தரகர் தெரு முஹைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் அவசரமாகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் இக்கடிதத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உறுப்பினர்களிடேயே கருத்துகள் பரிமாறப்பட்டன. இறுதியாக புதிதாக உருவாக்கப்பட்ட ‘அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டியை கலைப்பது என்றும் முதல் கூட்டமாக 19-05-2012 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்தை ரத்து செய்வது என்றும் மேலும் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அதில் தலையீடுவதில்லை என்றும் இன்ஷா அல்லாஹ் பள்ளியின் இடம் நமக்கு சாதகமாக தீர்ப்பாகி வரும்பட்சத்தில் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
மேலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு இதை ஒரு பின்னடைவு என்று கருதாமல் ஊரின் ஒற்றுமையைக் கருதி எடுக்கப்பட்ட சுமுக முடிவாகும்.


நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

1 comments:

habeb hb said...

எது எப்படியோ நம் ஊர்க்கு பேருந்து நிலையம் அருகில் ஒரு அழகிய பள்ளி கட்டவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்.அதற்கான முடிவு என்னவேன்று பார்கவும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!