இந்திய குடியரசு தலைவர் (நமது நாட்டின் முதல் குடிமகன்)

இந்திய குடியரசு தலைவர் (நமது நாட்டின் முதல் குடிமகன்)

தற்பொழுது இந்திய குடியரசு தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்து வருகிறார். இவரே இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர். இவரது பதவிகாலம் தான் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆகவேதான் குடியரசு தலைவருக்கான தேர்தலை நோக்கி சூடு கிளம்பியுள்ளது.

இந்திய குடியரசு தலைவரின் மாத சம்பளமாக – ரூ 1,50,000 வழங்கப்படுகிறது.
யார் இந்திய குடியரசு தலைவராக பதவி வகிக்கிறாரோ அவர்தான் இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாகவும் உள்ளார்.

தரைப்படை (Indian Army), கடற்படை (Indian Navy), விமானப்படை (Indian Air Force)

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – இராஜேந்திர பிரசாத்

1952 மே 13 முதல் 1962 மே 12 வரை இராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவராகவும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1962 மே 13 முதல் 1967 மே 12 வரை சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் குடியரசு தலைவராகவும், ஜாகிர் உசேன் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1967 மே 13 முதல் 1969 மே 3 வரை ஜாகிர் உசேன் குடியரசு தலைவராகவும், வரதாகிரி வெங்கட்ட கிரி குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1969 ஆகஸ்ட் 31 முதல் 1974 ஆகஸ்ட் 30 வரை வரதாகிரி வெங்கட்ட கிரி குடியரசு தலைவராகவும், கோபால் சுவரூப் பதக் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1974 ஆகஸ்ட் 31 முதல் 1979 ஆகஸ்ட் 30 வரை பக்ருதின் அலி அகமத் குடியரசு தலைவராகவும், பசப்பா தனப்பா ஜாத்தி குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1979 ஆகஸ்ட் 31 முதல் 1984 ஆகஸ்ட் 30 நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசு தலைவராகவும், முகம்மது இதயதுல்லா குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1984 ஆகஸ்ட் 31 முதல் 1987 ஜூலை 27 வரை கியானி ஜெயில் சிங் குடியரசு தலைவராகவும், இராமசாமி வெங்கட்ராமன் குடியரசு துணை தலைவராகவும்
இருந்துள்ளனர்.

1987 செப்டம்பர் 3 முதல் 1992 ஜூலை 24 வரை இராமசாமி வெங்கட்ராமன் குடியரசு தலைவராகவும், சங்கர் தயான் சர்மா குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1992 ஆகஸ்ட் 21 முதல் 1997 ஜூலை 24 வரை சங்கர் தயான் சர்மா குடியரசு தலைவராகவும், கோச்செரில் ராமன் நாராயணன் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

1997 ஆகஸ்ட் 21 முதல் 2002 ஜூலை 27 வரை கோச்செரில் ராமன் நாராயணன் குடியரசு தலைவராகவும், கிருஷ்ண காந்த் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

2002 ஆகஸ்ட் 19 முதல் 2007 ஜூலை 21 வரை ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் குடியரசு தலைவராகவும், பைரோன் சிங் செகாவத் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளனர்.

2007 ஆகஸ்ட் 11 முதல் தற்பொழுது வரை பிரதீபா பாட்டீல் குடியரசு தலைவராகவும், முகம்மத் ஹமீத் அன்சாரி குடியரசு துணை தலைவராகவும் இருந்து வருகின்றனர்.

அடுத்த குடியரசு தலைவராக முகம்மத் ஹமீத் அன்சாரி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!