அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம்



இன்று ( 07-06-2012 ) வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் A. அப்துல் முனாப், சமூக ஆர்வலர் சகோ. K.S. அப்துல் ரஹ்மான் ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக......

1. கிராஅத் :A. முஹம்மது இப்ராகிம் ஆலிம்

2. வரவேற்புரை : பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர்

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக.........

3. சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எழுதிய "விழிப்புணர்வு பக்கங்கள்" என்ற புத்தகம் வெளியீடப்பட்டது.

4. "அதிரை எக்ஸ்பிரஸ்" இணையதளம் சார்பாக நமதூரைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் நமதூரைச் சேர்ந்த சிறந்த கல்வி நிலையங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

5. அதிரையில் உள்ள ஒன்பது முஹல்லாக்களில் ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் அருகிலுள்ள ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ளவற்றைச் சார்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது. அரசால் பெறப்படுகிற நலத்திட்டங்கள் பலவும் இப்பகுதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் வாழும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிரை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு இலகுவாக அதிரை பேரூராட்சியின் ஒத்துழைப்புடன் மாவட்ட கலக்டர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று அனைத்து முஹல்லாவின் உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6. AAMF பைலாவின் இறுதிவடிவம் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துகள் / ஆலோசனைகள் எதிர்பார்க்கப்பட்டன.

7. லண்டன் வாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரத்தை ஏழை மாணவ மாணவியரின் சீருடைக்காக பயன்படுத்த வேண்டி அதிரை பைத்துல்மால் தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

8. துபைவாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஒருசில இளைஞர்களால் வசூல் செய்யப்பட்ட கலிஃபா உமர் (ரலி) மஸ்ஜீத் ( சுரைக்கா கொல்லை ) கட்டிட நிதியாக ரூபாய் ஐம்பது ஆயிரம் அதன் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

9. சிறப்பு விருந்தினர்களாக காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், பெரிய ஜும்மாப் பள்ளி நிர்வாகிகள் சகோ. V.M. அப்துல் மஜீத், சகோ. K.S.M. பகுருதீன்,கீழத்தெரு ஜமாத் தலைவர் சகோ. தாஜுதீன், தரகர் தெரு ஜமாத் நிர்வாகி சகோ. அஹமது ஹாஜா, "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ், "கவிஞர்" சபீர், அதிரை நிருபர் நெறியாளர், சகோ. நெய்னா தம்பி, அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகி சகோ. ஜஃபருல்லா, ஆகியோர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

10. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "நெசவுத்தெரு முஹல்லாவில்" வருகின்ற 13-07-2012 அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

5 comments:

அப்துல் ஜலீல்.M said...

ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்திய ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவாசிகள் + சகோ. சேக்கனா M. நிஜாம் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

அப்துல் ஜலீல்.M said...
This comment has been removed by the author.
Unknown said...

1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.

2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.

3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.



மேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.



எனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.



இப்படிக்கு,

Rosekhan

Email Id:rosekhanus@gmail.com

Unknown said...

1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.

2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.

3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.



மேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.



எனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.



இப்படிக்கு,

Rosekhan

Email Id:rosekhanus@gmail.com

habeb hb said...

அனைத்துமுஹல்லா. ஆறாவதுக் கூட்டம் நடத்திய பிலால் நகர் வாசிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!