AAMF பைலாவின் இறுதிவடிவம் வாசிக்கப்பட்டு
உறுப்பினர்களின் கருத்துகள் / ஆலோசனைகள் எதிர்பார்க்கப்பட்டன//
அஸ்ஸலாமு
அலைக்கும்.
கூட்டத்தில் வாசிக்கப்பட்டது கூட்டமைப்பின் பைலாவுடைய வரைவுதான் என்பது
எனது புரிதல். அதனால்தான் பொதுவில் கருத்துகள்/ஆலோசனைகள் கேட்கப்பட்டன. பொதுவில் கருத்துக்
கேட்கப்பட்டதால் எல்லா அமைப்புகளும் பின்பற்றும் பொது நெறியான, "கடந்த அமர்வின்
ஃபாலோ அப் பற்றி இந்த அமர்வில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; என்றாலும் வருங்காலத்தில்
இக்குறை இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்" என்ற எனது கருத்தை எழுந்து தெரிவித்தேன்.
"பைலா பற்றி நிர்வாகிகளுக்குள் பேசிக்கொள்ளலாம். பொதுவில் கருத்துக் கேட்க வேண்டாம்"
என்று கீழத்தெரு நிர்வாகிகளுள் ஒருவரும் என் மருமகனுமான நெய்னா முஹம்மது (மான்) மறுப்புத்
தெரிவித்தார்.
ஊர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, கூட்டமைப்பு
உருவாவதற்குக் காரணமானவர்களுள் எனக்கும் ஒரு பங்கிருந்த போதிலும் அதிரை எக்ஸ்ப்ரஸ்
ஆலோசகன் எனும் முறையில் விருதுகள் வழங்குவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்ததால் கூட்டமைப்புக்
கூட்டத்தில் கூடுதல் கருத்தேதும் வைக்காமல் "நேரம்டா" என்று நினைத்துக் கொண்டு
எழுந்து வந்துவிட்டேன். என்றாலும் கூட்டமைப்புக்கான எனது கருத்தை
நம் சகோதர வலைத்தளமான அதிரை நிருபரில் பதிவு செய்திருக்கிறேன். அது: நேற்றைய அமர்வில் அனைத்து மஹல்லா கூட்டமைப்புக்கான
பைலாவின் சுருக்கக் கருத்துகள் படிக்கப்பட்டன. அதில், சுன்னத் ஜமாத்தின் கொள்கைப்படியும்
ஷரீஅத்படியும் பைலா வகுக்கப்படும் என்று பேரா. அப்துல் காதிர் குறிப்பிட்டார். அது
எப்படி என்பது குழப்பமாக உள்ளது.
சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள்
கந்தூரி எடுப்பார்கள்; ஷரீஅத் அதைத் தடுக்கும்.
சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரதட்சனை வாங்குவர்; ஷரீஅத் அதைத் தடுக்கும்.
சுன்னத் ஜமாத் வட்டி, குடி, விபச்சாரம் போன்றவற்றைக் கண்டுகொள்ளாது; ஷரீஅத் அவற்றைக் குற்றங்களென தண்டிக்கும்.
இவை போன்ற பல முரண்கள் சுன்னத் ஜமாத்துக்கும் ஷரீஅத்துக்கும் இருக்கின்றன.
அதிரை அனைத்து மஹல்லாக் கூட்டமைப்பு,
தன் பயணத்தை அமைதியாகவும் கண்ணியமாகவும் தொடர விரும்பினால் குறைந்தபட்சம் பொறுப்பில்
இருப்பவர்கள் ஐவேளை தொழக்கூடியவர்களாக இருக்கவேண்டும் எனும் நிபந்தனை பைலாவில் சேர்க்கப்படவேண்டும்.
மிகமிக முக்கியமாக கந்தூரிக்கு
ஆதரவளிப்பவர்கள் எவரும் கூட்டமைப்பில் இடம்பெறலாகாது. So called சுன்னத் ஜமாத்தாக
இல்லாமல் உருப்படியான சுன்னத் ஜமாத்தின் கொள்கைகளான இறைமறையையும் நபிவழியையும் பின்பற்றக்
கூடியவர்களாகக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் மாறவேண்டும். இந்தக் கருத்தை,
கூட்டமைப்பு உருவாவதற்குப் பாடுபட்ட அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
1 comments:
நீதி செலுத்துதல் – பொறுப்பில் இருப்பவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். “மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (5:8)
1. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல், முழுவதும் அவனை சார்ந்திருத்தல்.
2. பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற தேவையான உள, உடல், அறிவு, ஆற்றல்கள், வலிமை.
3. கலந்தாலோசனை மூலம் முடிவெடுத்து செயல்படுதல்.
போன்ற தன்மைகளை அவசியம் பெற்றிருக்க வேண்டும்.மஹல்லா போன்ற சிறிய பொறுப்பாயிருந்தாலும் ஆட்சி தலைமை போன்ற பெரும் பொறுப்பாயிருந்தாலும் சரியே.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!